Thursday, May 28, 2015

குச்சி குச்சி ராக்கம்மா - kuchi kuchi raakkamma

குச்சி குச்சி ராக்கம்மா பொண்ணு வேணும் 
கூடசாலி பொண்ணு வேணும் 
சாதி சனம் தூங்கையிலே சாம கோழி கூவையிலே 

குச்சி குச்சி ராக்கம்மா வரமாட்டா 
நீ கொஞ்சி பேச பொண்ணு ஒண்ணு தரமாட்டா 
சாதி சனம் தூங்கலையே சாம கோழி கூவலையே

காட்டு முயலுக்கு பனி பிடிக்கும் கானக் குயிலுக்கு வெயில் பிடிக்கும் 
ஆணிவேருக்கு மண் பிடிக்கும் அப்பனுக்கு பெண் பிடிக்கும் 
அரசன் மகனுக்கு வாள் பிடிக்கும் அழுத குழந்தைக்கு பால் பிடிக்கும் 
புருஷன் ஜாமத்தில் கனைக்கயிலே பொம்பளைக்கு கிலி பிடிக்கும் 

அல்லும் பகலுமே நனைந்தாலும் ஆத்து மீனுக்கா குளிரெடுக்கும் 
அள்ளி அள்ளி நான் எடுத்தாலும் ஆனந்த பூவுக்கா பொன்மேனி வலிக்கும்
பொட்டைபுள்ள பெத்துக் குடு போதும் என்னை விட்டு விடு
விளக்கை எரிய விட்டு வெட்கத்தை அணைத்து விடு -- (குச்சி குச்சி)

சிறகு நீங்கினால் பறவையில்லை திரியை நீங்கினால் தீபம் இல்லை 
உன்னை நீங்கினால் நானில்லை உனக்கிது புரியவில்லை 
உடலை நீங்கினால் உயிரும் இல்லை ஒலியை நீங்கினால் மொழியுமில்லை 
உன்னை நீங்கினால் நானில்லை உனக்கிது புரியவில்லை 

பூமி சுற்றுவது நின்றுவிட்டால் புவியில் என்றுமே மாற்றமில்லை 
புருஷன் சுற்றுவது நின்றுவிட்டால் எந்நாளும் பெண் வாழ்வில் ஏற்றங்கள் இல்லை 
பொத்தி வெச்ச ஆசை வந்து நெத்தியில துடிக்குது 
தொட்ட இடம் பத்திக்கொள்ளும் தூரத்தில் ஒதுங்கி நில்லு -- (குச்சி குச்சி)