Friday, September 26, 2014

கடவுள் ஒரு நாள் - Kadavul oru naal

கடவுள் ஒரு நாள் உலகைக் காண தனியே வந்தாராம்
கண்ணில் கண்ட மனிதனை எல்லாம் நலமா என்றாராம் 
ஒரு மனிதன் வாழ்வை இனிமையென்றான் 
ஒரு மனிதன் அதுவே கொடுமையென்றான் 
படைத்தவனோ உடனே சிரித்துவிட்டான் 

கள்ளம் இல்லா பிள்ளை உள்ளம் நான் தந்தது 
காசும் பணமும் ஆசையும் இங்கே யார் தந்தத
எல்லை இல்லா நீரும் நிலமும் நான் தந்தது
எந்தன் சொந்தம் என்னும் எண்ணம் ஏன் வந்தது 
இறைவனுக்கே இது புரியவில்லை மனிதனின் கொள்கை தெரியவில்லை
ஒரு மனிதன் வாழ்வை இனிமையென்றான் 
ஒரு மனிதன் அதுவே கொடுமையென்றான் 
படைத்தவனோ உடனே சிரித்துவிட்டான் (கடவுள் ஒரு நாள்...)


பள்ளிக்கூடம் செல்லும் வழியில் கடவுள் நின்றானாம் 
பச்சைப்பிள்ளை மழலை மொழியில் தன்னைக் கண்டானாம்
உள்ளம் எங்கும் வெள்ளம் பொங்கும் அன்பைக் கண்டானாம் 
உண்மை கண்டேன் போதும் என்று வானம் சென்றானாம்(கடவுள் ஒரு நாள்...)