Wednesday, September 7, 2011

புதியது பிறந்தது - Pudhiyathu piranthathu

அட புதியது பிறந்தது பழையது ஒதுங்குது
அரஹர சிவ சிவ பழைய பரமசிவமே 
அட பைத்தியம் தெளிஞ்சது வைத்தியம் பலிச்சது 
அரஹர சிவ சிவ பழைய பரமசிவமே 

ஒண்ணாச்சு பாரு இதுவர ரெண்டான ஊரு  
அண்ணாச்சி மூளை முடிச்சது பொன்னான வேலை 
அட வீராப்பும் பொல்லாப்பும் பொய்யா போச்சு அம்மம்மா 

கூடாம நம்மைத்தான் கூறுகட்டி சிலர் கோளாறு செஞ்சாங்க வேலி கட்டி 
ஆத்தாடி அண்ணன்தான் தோளுதட்டி அத சாச்சாரு மண்ணில வாளில் வெட்டி 
உள்ளத்துணிவு உள்ளவரு ஊருக்குதவும் நம்மவரு 
வாத்தியத்த தொட்டுத்தான் கொட்டத்தான் கொட்டத்தான் 
ஓசையெல்லாம் எட்டட்டும் திக்கெட்டும் திக்கெட்டும்
அடி அம்மாடி எல்லோரும் ஆட்டம் போடும் நாள்தானோ 

அற்புதமா அதிசயமா பூத்திருக்கு  
முத்துநக ரத்தினமா கெடச்சிருக்கு 
நிச்சயமா தற்பெரும காத்திருக்கு 
பத்திரமா சக்தியவ துணையிருப்பா 

மூவேந்தர் தேர்விட்ட சீமையடி நம்ம முப்பாட்டன் ஏர்விட்ட பூமியடி 
வெள்ளாடு சிங்கத்த சாடுமடி இந்த வீரம் நம் மண்ணுக்கு சாட்சியடி 
மண்ணின் பெருமை காத்திடணும்  
அண்ணன் மொழியை கேட்டிடணும் 
ஓரினத்து மக்கள்தான்  நாமெலாம் பொன்னம்மா 
ஒர்வயத்து பிள்ளை தான் எல்லாரும் பொன்னம்மா 
அம்மாடி தெம்மாங்கு பாட்டு பாடும்  நாள்தானோ