Tuesday, July 8, 2014

கண்ணாலே மிய்யா மிய்யா - Kannale miya miya

கண்ணாலே மிய்யா மிய்யா 
கிள்ளாதே கிய்யா கிய்யா 
உள்ளே ஓர் உய்யா உய்யா 
நீ இல்லாமையா நீலயாமையா 

காதலால் சொக்கி பையா 
இனிக்குமே  உந்தன் கையா 
இதழின் ஓரம் தேவையா 

பாதி கண்கள் மூடும் 
மீதிக் கண்கள் தேடும் 
மூடிக்கொண்டும் உன்னை பார்க்கும் அல்லோ 
பார்வை தப்பும் நேரம் 
நாணம் கப்பல் ஏறும் 
கூந்தல் கூட கொஞ்சம் கூசுமல்லோ 
முதல் முதல் ஏழுதும் 
தேர்வின் பயம் தான் 
உயிரினில் நுழையும் நேரம் இதுதான் 
ஹே கொஞ்சம் சும்மா இரு 
பக்கம் வந்தால் வம்பா இது

இமை ஒட்டிக்கொள்ளும் 
இதழ் திட்டித்தள்ளும் 
நிழல் கட்டிக்கொள்ளும் 
ஒரே நிழல் மிஞ்சும் -- (கண்ணாலே மிய்யா)

தீயை தின்னும் நேரம் 
தேகம் எங்கும் ஈரம் 
மோகம் கொண்ட முத்தம் காயாதல்லோ 
காமம் கட்டில் ஆடும் 
மூச்சின் வெப்பம் கூடும் 
ஆடை பற்றிக்கொள்ள கூடுமல்லோ 
தலையணை முழுதும் ஓ கூந்தல் அலைதான் 
இருபது விரலும் ஹோய் தீயின் கிளைதான் 
ஹேய் என்னை தீண்டாதிரு 
பக்கம் வந்தால் தள்ளாதிரு 

கண்கள் ரெண்டும் பள்ளம் 
வேர்வை கொட்டி வெள்ளம் 
கட்டில் வெட்கம் செல்லும் 
ஒரே நிழல் மிஞ்சும்  -- (கண்ணாலே மிய்யா)