Friday, September 14, 2012

நீ பாதி நான் பாதி - Nee paadhi naan paadhi

நீ பாதி நான் பாதி கண்ணே 
அருகில் நீயின்றி தூங்காது கண்ணே 
நீயில்லையேல் இனி நானில்லையே 
உயிர் நீயே 

வான பறவை வாழ நினைத்தால் வாசல் திறக்கும் வேடந்தாங்கல் 
கான பறவை பாட நினைத்தால் கையில் விழுந்த பருவப்பாடல் 
மஞ்சள் மணக்கும் என் நெற்றி வைத்த பொட்டுக்கொரு அர்த்தம் இருக்கும் உன்னாலே 
மெல்ல சிரிக்கும் உன் முத்து நகை ரத்தினத்தை அள்ளி தெளிக்கும் முன்னாலே 
மெய்யானது உயிர் மெய்யாகவே தடை ஏது 

இடது விழியில் தூசி விழுந்தால் வலது விழியும் கலங்கி விடுமே 
இருட்டில் கூட இருக்கும் நிழல் நான் இறுதி வரைக்கும் தொடர்ந்து வருவேன் 
பங்கம் எதற்கு என் பொன்னுலகம் பெண்ணுருவில் பக்கம் இருக்கு கண்ணே வா 
இந்த மனம் தான் என் மன்னவனும் வந்துலவும் நந்தவனம் தான் அன்பே வா 
சுமையானது ஒரு சுகமானது சுவை நீதான்