Saturday, June 13, 2015

அந்தி மழை பொழிகிறது - andhi mazhai pozhigirathu

அந்தி மழை பொழிகிறது ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது 
இந்திரன் தோட்டத்து முந்திரியே மன்மத நாட்டுக்கு மந்திரியே 

தேனில் வண்டு மூழ்கும் போது பாவம் என்று வந்தாள் மாது 
நெஞ்சுக்குள் தீயை வைத்து மோகம் என்றாய் 
தண்ணீரில் மூழ்கிக்கொண்டே தாகம் என்றாய் 
தனிமையிலே வெறுமையிலே எத்தனை நாளடி இளமையிலே
கேட்டன இரவுகள் சுட்டன கனவுகள் இமைகளும் சுமையடி இளமையிலே 

தேகம் யாவும் தீயின் தாகம் தாகம் தீர நீதான் மேகம்
கண்ணுக்குள் முள்ளை வைத்து யார் தைத்தது 
தண்ணீரில் நிற்கும் போதே வேர்க்கின்றது 
நெஞ்சு பொறு கொஞ்சம இரு தாவணி விசிறிகள் வீசுகிறேன் 
மன்மத அம்புகள் தைத்த இடங்களில் சந்தனமாய் எனை பூசுகிறேன்
 
அந்தி மழை பொழிகிறது ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது 
சிப்பியில் தப்பிய நித்திலமே ரகசிய ராத்திரி புத்தகமே

அகரம் இப்போ சிகரம் - agaram ippo sigaram

அகரம் இப்போ சிகரம் ஆச்சு தகரம் இப்போ தங்கம் ஆச்சு 
காட்டு மூங்கில் பாட்டு பாடும் புல்லாங்குழல் ஆச்சு 
சங்கீதமே சந்நிதி சந்தோசம் சொல்லும் சங்கதி 

கார்காலம் வந்தால் என்ன கடுங்கோடை வந்தால் என்ன 
மழைவெள்ளம் போகும் கரைரெண்டும் வாழும் 
காலங்கள் போனால் என்ன கோலங்கள் போனால் என்ன 
பொய் அன்பு போகும் மெய் அன்பு வாழும் 
அன்புக்கு உருவம் இல்லை பாசத்தில் பருவம் இல்ல 
வானோடு முடிவும் இல்லை வாழ்வோடு விடையும் இல்லை 
இன்றென்பது உண்மையே நம்பிக்கை உங்கள் கையிலே


தண்ணீரில் மீன்கள் வாழும் கண்ணீரில் காதல் வாழும் 
ஊடல்கள் எல்லாம் தேடல்கள் தானே
பசியாற பார்வை போதும் பரிமாற வார்த்தை போதும் 
கண்ணீரில் பாதி காயங்கள் ஆறும் 
தலைசாய்க்க இடமா இல்லை தலை கோத விரலா இல்லை 
இளங்காற்று வரவா இல்லை இளைப்பாறு பரவாயில்லை
நம்பிக்கையே நல்லது எறும்புக்கும் வாழ்க்கை உள்ளது


ஏதோ ஒரு பாட்டு - aedho oru pattu (male version)

ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும் 
கேட்கும் போதெல்லாம் உன் ஞாபகம் தாலாட்டும் 
என் கண்களின் இமைகளிலே உன் ஞாபகம் சிறகடிக்கும் 
நான் சுவாசிக்கும் மூச்சினிலே உன் ஞாபகம் கலந்திருக்கும் 
ஞாபகங்கள் மழையாகும் ஞாபகங்கள் குடையாகும் 
ஞாபகங்கள் தீமூட்டும் ஞாபகங்கள் நீரூற்றும்

கவிதை என்றாலே உன் பெயரின் ஞாபகமே
கேட்கும் இசையெல்லாம் நீ பேசும் ஞாபகமே
பூக்களின் மேலே பனித்துளி பார்த்தால் முகப்பரு ஞாபகமே
அதிர்ஷ்டம் என்றதும் உன் மச்சம் ஞாபகம்
அழகு என்றதும் உந்தன் மொத்தம் ஞாபகம்

தென்றல் என்றாலே உன் வாசல் ஞாபகமே
வசந்தம் என்றாலே உன் வருகை ஞாபகமே 
தொட்டாசிணுங்கி பார்த்தால் உந்தன் வெட்கம் ஞாபகமே
அலைகள் போலவே மோதும் உந்தன் ஞாபகம்
மறந்து போனதே எனக்கு எந்தன் ஞாபகம்

ஏதோ ஒரு பாட்டு - aedho oru paattu (female version)

ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும் 
கேட்கும் போதெல்லாம் சில ஞாபகம் தாலாட்டும் 
என் கண்களின் இமைகளிலே சில ஞாபகம் சிறகடிக்கும் 
நான் சுவாசிக்கும் மூச்சினிலே சில ஞாபகம் கலந்திருக்கும் 
ஞாபகங்கள் மழையாகும் ஞாபகங்கள் குடையாகும் 
ஞாபகங்கள் தீமூட்டும் ஞாபகங்கள் நீரூற்றும் 

அம்மா கைகோர்த்து நடை பழகிய ஞாபகமே 
தனியே நடை பழகி நான் தொலைந்தது ஞாபகமே
புத்தகம் நடுவே மயிலிறகை நான் வளர்த்தது ஞாபகமே
சின்ன குழந்தையில் சேலை கட்டும் ஞாபகம்
வெட்கம் வந்ததும் முகத்தை மூடும் ஞாபகம்

ரயிலின் பயணத்தில் மரம் நகர்ந்தது ஞாபகமே 
சுற்றும் ராட்டினத்தில் நான் மயங்கிய ஞாபகமே
காகிதகப்பல் கவிழ்ந்ததுமே நான் அழுதது ஞாபகமே 
கட்டபொம்மனின் கதையை கேட்ட ஞாபகம்
அட்டைக்கத்தியில் சண்டை போட்ட ஞாபகம்

அடி பூங்குயிலே பூங்குயிலே - adi poonguyile poonguyile

அடி பூங்குயிலே பூங்குயிலே கேளு நீ பாட்டெடுத்த காரணத்த கூறு 
யாரிடத்தில் உன் மனசு போச்சு நூலைப்போல உன் உடம்பு ஆச்சு
வட்டமிட்டு சுத்தும் கண்ணு வீச்சு வாயவிட்டு போனதென்ன பேச்சு 

ஆத்தங்கரை அந்தப்புரம் ஆக்கிகொள்ளவா 
அந்த அக்கரைக்கும் இக்கரைக்கும் கோட்டை கட்டவா 
மாமன் கையில் பூவை தந்து  சூடிக்கொள்ளவா 
அடி ஆசையென்னும் ஊஞ்சல் கட்டி ஆடிக்கொள்ளவா
சொல்லு சொல்லு திட்டமென்ன சொல்லுவது கஷ்டமா 
பொத்தி பொத்தி வெச்சதென்ன என்னனவோ இஷ்டமா 
கூவாம கூவுறியே குக்கூ குக்கூ பாட்டு 
மாட்டாம மாட்டிப்புட்டா சொக்குபொடி போட்டு -- (யாரிடத்தில்...)

ஊரையெல்லாம் சுத்தி வந்த ஒத்தைக்கிளியே 
இப்போ ஓரிடத்தில் நின்றதென்ன சொல்லு கிளியே 
சொந்தபந்தம் யாருமின்றி வந்த கிளியே 
ஒரு சொந்தம் இப்போ வந்ததேன்ன வாசல் வழியே 
வேறு விட்ட ஆலங்கன்னு வானம் தொட பாக்குது 
வானம் தொடும் ஆசையிலே மெல்ல மெல்ல பூக்குது
பூப்பூவா பூக்கவேச்ச மாமனவன் யாரு 
பாடுகிற பாட்டுலதான் நீயும் அத கூறு  -- (யாரிடத்தில்...)

ஆயிரம் தாமரை மொட்டுக்களே - aayiram thamarai mottukale

ஆயிரம் தாமரை மொட்டுக்களே வந்து ஆனந்த கும்மி கொட்டுங்களேன் 
இங்கு ரெண்டு ஜாதி மல்லிகை தொட்டுக்கொள்ளும் காமன் பண்டிகை 
கோவிலில் காதல் தொழுகை 

கொத்து மலரே அமுதம் கொட்டும் மலரே 
இங்கு தேனை ஊற்று இது தீயின் ஊற்று -- (2)
உள்ளிருக்கும் வேர்வை வந்து நீர் வார்க்கும் 
புல்லரிக்கும் மேனி எங்கும் பூப்பூக்கும் 
அடிக்கடி தாகம் வந்து ஆளைக்குடிக்கும் 

வீட்டுக் கிளியே கூண்டை விட்டு தாண்டி வந்தியே 
ஒரு காதல் பாரம் இரு தோளில் ஏறும் -- (2)
புல்வெளியின் மீது ரெண்டு பூமாலை 
ஒன்றை ஒன்று சூடும் இது பொன்வேளை 
கள் வடியும் பூக்கள் தங்கள் காம்பை மறக்கும்

காதலெனும் தேர்வெழுதி - kadhalenum thervezhuthi

காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான்
உன் எண்ணம் என்னும் ஏட்டில் என் எண்ணை பார்த்த போது 
நானே என்னை நம்பவில்லை எந்தன் கண்ணை நம்பவில்லை 
உண்மை உண்மை உண்மை உண்மை அன்பே உன்மேல் உண்மை 
உன் வசம் எந்தன் பெண்மை 

டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி (2)

இந்த வளைக்கையில் வளையல்கள் நானல்லவா 
இன்று வளைக்கையை வளைக்கின்ற நாளல்லவா 
சுகம் வளைக்கையை வளைக்கையில் உண்டானது 
மேன்மேலும் கை வளை வளை என ஏங்காதோ
இது கன்னங்களா இல்லை தென்னம்கள்ளா 
இந்த கன்னமெல்லாம் உந்தன் சின்னங்களா
இங்கு நானிருந்தேன் வெறும் மெய் எழுத்தாக நீ வந்து சேர்ந்ததாய் உயிரெழுத்தாக 

உந்தன் மடியினில் கிடப்பது சுகம் சுகம் 
இந்த சுகத்தினில் சிவந்தது முகம் முகம் 
மனம் இதற்கென கிடந்தது தவம் தவம் 
ஆனந்தமே இனி இவன் உயிர் போனாலும் 
என்றும் ஓய்வதில்லை இந்த காதல் மழை 
கடல் நீளம் உள்ள அந்த காலம் வரை 
இது பிறவிகள் தோறும் விடாத பந்தம் பிரிவெனும் தீயில் விழாத சொந்தம்