Showing posts with label Ninaippathaelaam nadanthuvittaal. Show all posts
Showing posts with label Ninaippathaelaam nadanthuvittaal. Show all posts

Friday, September 26, 2014

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் - Ninaippathaelaam nadanthuvittaal

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை 
நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை 
முடிந்த கதை தொடர்வதில்லை இறைவன் ஏட்டினிலே
தொடர்ந்த கதை முடிவதில்லை மனிதன் வீட்டினிலே 

ஆயிரம் வாசல் இதயம் அதில் ஆயிரம் எண்ணங்கள் உதயம் 
யாரோ வருவார் யாரோ இருப்பார் வருவதும் போவதும் தெரியாது 
ஒருவர்  மட்டும் குடியிருந்தால் துன்பம் ஏதுமில்லை 
ஒன்றிருக்க ஒன்று  வந்தால் என்றும் அமைதியில்லை (நினைப்பதெல்லாம்...)

எங்கே வாழ்க்கை தொடங்கும் அது எங்கே எவ்விதம் முடியும் 
இதுதான் பாதை இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது 
பாதையெல்லாம் மாறிவரும் பயணம் முடிந்துவிடும் 
மாறுவதை புரிந்துகொண்டால் மயக்கம் தெளிந்துவிடும் (நினைப்பதெல்லாம்...)