Showing posts with label Uravugal thodarkathai. Show all posts
Showing posts with label Uravugal thodarkathai. Show all posts

Saturday, September 10, 2011

உறவுகள் தொடர்கதை - Uravugal thodarkathai


உறவுகள் தொடர்கதை உணர்வுகள் சிறுகதை
ஒரு கதை என்றும் முடியலாம் முடிவிலும் ஒன்று தொடரலாம்
இனி எல்லாம் சுகமே

உன் நெஞ்சிலே பாரம் உனக்காகவே நானும்
சுமைதாங்கியாய் தாங்குவேன்
உன் கண்களின் ஓரம் எதற்காகவோ ஈரம்
கண்ணீரை நான் மாற்றுவேன்
வேதனை தீரலாம் வெறும்பனி விலகலாம்
வெண்மேகமே புது அழகிலே நாமும் இணையலாம்

வாழ்வென்பதோ கீதம் வளர்கின்றதோ நாதம்
நாளொன்றிலும் ஆனந்தம் 
நீ கண்டதோ துன்பம் இனி வாழ்வெலாம் இன்பம்
சுகராகமே ஆரம்பம்
நதியிலே புதுப்புனல் கடலிலே கலந்தது
நம் சொந்தமோ இன்று இணைந்தது இன்பம் பிறந்தது