Saturday, June 13, 2015

ஆயிரம் தாமரை மொட்டுக்களே - aayiram thamarai mottukale

ஆயிரம் தாமரை மொட்டுக்களே வந்து ஆனந்த கும்மி கொட்டுங்களேன் 
இங்கு ரெண்டு ஜாதி மல்லிகை தொட்டுக்கொள்ளும் காமன் பண்டிகை 
கோவிலில் காதல் தொழுகை 

கொத்து மலரே அமுதம் கொட்டும் மலரே 
இங்கு தேனை ஊற்று இது தீயின் ஊற்று -- (2)
உள்ளிருக்கும் வேர்வை வந்து நீர் வார்க்கும் 
புல்லரிக்கும் மேனி எங்கும் பூப்பூக்கும் 
அடிக்கடி தாகம் வந்து ஆளைக்குடிக்கும் 

வீட்டுக் கிளியே கூண்டை விட்டு தாண்டி வந்தியே 
ஒரு காதல் பாரம் இரு தோளில் ஏறும் -- (2)
புல்வெளியின் மீது ரெண்டு பூமாலை 
ஒன்றை ஒன்று சூடும் இது பொன்வேளை 
கள் வடியும் பூக்கள் தங்கள் காம்பை மறக்கும்