Tuesday, March 14, 2023

thangamagan indru - தங்கமகன் இன்று

thangamagan indru singa nadai pottu arugil arugil vandhaan
rendu puram patri eriyum mezhugaaga mangai urugi nindraal
kattum aadai en kaadhalan kandadhum nazhuviyadhe 
vetka thaazhpaal adhu vendhanai kandathum vilagiyadhe
raththa thaamarai mutham kaetkudhu vaa en vaazhve vaa


chinna kalaivaani nee vanna silaimaeni
adhu manjam thanil maaram thalai vaikum inbathalagaani
aasai thalaivan nee naan adimai magaraani
mangai ival angam engum poosa needhaan marudhaani
thirakkaadha pookkal vedithaaga vendum
thenpaandi thendral thiranthaaga vendum
enna sammadhama innum thaamadhama


thookkam vandhaale manam thalaiyanai thedaadhu 
thaane vandhu kaadhal kollum ullam jaadhagam paarkaadhu
megam mazhai thanthaal thuli mele pogaadhu
pennin manavaanil vizhavendum vidhithaan maaradhu
en perin pinne nee sera vaendum kadal konda gankai niram maara vendum
enai maatrividu idhazh ootri kodu


thangamagan indru singa nadai pottu arugil arugil vandhaan
rendu puram patri eriyum mezhugaaga mangai urugi nindraal
kattum aadai un kaadhalan kandadhum vilagiyadho
muththam enbadhan artham pazhagida vaa en vaazhve vaa

தங்கமகன் இன்று சிங்க நடை போட்டு அருகில் அருகில் வந்தான் 
ரெண்டு புறம் பற்றி எரியும் மெழுகாக மங்கை உருகி நின்றாள் 
கட்டும் ஆடை என் காதலன் கண்டதும் நழுவியதே 
வெட்கத் தாழ்ப்பாள் அது வேந்தனை கண்டதும் விலகியதே   
ரத்தத் தாமரை முத்தம் கேட்குது வா என் வாழ்வே வா 


சின்ன கலைவாணி நீ வண்ண சிலைமேனி 
அது மஞ்சம் தனில் மாறன் தலை வைக்கும் இன்ப தலைகாணி 
ஆசை தலைவன் நீ நான் அடிமை மகாராணி 
மங்கை இவள் அங்கம் எங்கும் பூச நீ தான் மருதாணி 
திறக்காத பூக்கள் வெடித்தாக வேண்டும் 
தென்பாண்டி தென்றல் திறந்தாக வேண்டும் 
என்ன சம்மதமா இன்னும் தாமதமா  


தூக்கம் வந்தாலே மனம் தலையணை தேடாது 
தானே வந்து காதல் கொள்ளும் உள்ளம் ஜாதகம் பார்க்காது 
மேகம் மழை தந்தால் துளி மேலே போகாது 
பெண்ணின் மனவானில் விழவேண்டும் விதிதான் மாறாது 
என் பேரின் பின்னே நீ சேர வேண்டும் 
கடல் கொண்ட கங்கை நிறம் மாற வேண்டும் 
என்னை மாற்றிவிடு இதழ் ஊற்றி கொடு 


தங்கமகன் இன்று சிங்க நடை போட்டு அருகில் அருகில் வந்தான் 
ரெண்டு புறம் பற்றி எரியும் மெழுகாக மங்கை உருகி நின்றாள் 
கட்டும் ஆடை உன் காதலன் கண்டதும் நழுவியதோ 
வெட்கத் தாழ்ப்பாள் அது வேந்தனை கண்டதும் விலகியதோ 
முத்தம் என்பதன் அர்த்தம் பழகிட வா என் வாழ்வே வா 


Wednesday, March 8, 2023

anaarkali anarkali - அனார்கலி அனார்கலி

anarkali anarkali aagayam nee bologam nee
ulagathile migapperum poovum neeyadi
nadhigalile chinnanchiru nadhiyum neeyadi
santhithaenadi un kankalaal swasithaenadi un paarvaiyaal

anarkali anarkali aagayam nee boologam nee
sirippum azhugaiyum serum pulliyil enai tholaithen
isaiyum kavidhaiyum serum pulliyil kandupidithen
kadal kaatru nee naan paaymaram nadhi kaatru nee naan thaavaram

iyanthira manidhanaipol unnaiyum seyvenae
iru vizhi paarvaigalaal unnaiyum asaithaenae
azhagukku ellam thimir adhigam azhagiyin thimiril rusi adhigam 
adhai indru naanae unnidam kanden
kavinganukaelaam kurumbadhigam kaviganin kurumbil suvai adhigam 
adhai indru naane unnidam kanden
nadai nadanthu pogaiyil nee ilakkkaname
naanam kondu pogaiyil nee ilakkiyame

narumanam enbatharku mugavari pookkal dhaane
en manam enbatharku mugavari nee dhaane
ennidam thondrum kavidhaikelaam muthalvari thantha mugavari nee
iruthayam sollum mugavari needhaan
iravugal thondrum kanavukelaam iruppidam thantha mugavari nee
ennidam serum mugavari needhaan
mazhaiththukku megamae mudhai mugavari
un idhazhil mouname uyir mugavariye

அனார்கலி அனார்கலி ஆகாயம் நீ பூலோகம் நீ
உலகத்திலே மிகப்பெரும் பூவும் நீயடி
நதிகளிலே சின்னஞ்சிறு நதியும் நீயடி
சந்திதேனடி உன் கண்களால் ஸ்வாசித்தேனடி உன் பார்வையால்

அனார்கலி அனார்கலி ஆகாயம் நீ பூலோகம் நீ
சிரிப்பும் அழுகையும் சேரும் புள்ளியில் என்னை தொலைத்தேன்
இசையும் கவிதையும் சேரும் புள்ளியில் கண்டுபிடித்தேன்
கடல் காற்று நீ நான் பாய்மரம் நதி காற்று நீ நான் தாவரம்

இயந்திர மனிதனை போல் உன்னையும் செய்வேனே
இரு விழி பார்வைகளால் உன்னையும் அசைத்தேனே
அழகுக்கு எல்லாம் திமிர் அதிகம் அழகியின் திமிரில் ருசி அதிகம்
அதை இன்று நானே உன்னிடம் கண்டேன்
கவிஞனுக்கெல்லாம் குறும்பதிகம் கவிஞனின் குறும்பில் சுவை  அதிகம்
அதை இன்று நானே உன்னிடம் கண்டேன்
நடை நடந்து போகையில் நீ இலக்கணமே
நாணம் கொண்டு பார்க்கையில் நீ இலக்கியமே

நறுமணம் என்பதற்கு முகவரி பூக்கள் தானே
என் மனம் என்பதற்கு முகவரி நீதானே
என்னிடம் தோன்றும் கவிதைக் எல்லாம் முதல்வரி தந்த முகவரி நீ
இருதயம் சொல்லும் முகவரி நீதான்
இரவுகள் தோன்றும் கனவுக்கெல்லாம் இருப்பிடம் தந்த முகவரி நீ
என்னிடம் சேரும் முகவரி நீதான்
மழைத்துளிக்கு மேகமே முதல் முகவரி
உன் இதழில் மௌனமே உயிர் முகவரியோ


Oru naalum unai maravaatha - ஒரு நாளும் உனை மறவாத

kankana kanavena kinkini manigalum olikka olikka
engengilum mangalam mangalam enum olu muzhanga muzhanga oru suyamvaram nadakindradhe
idhu sugam tharum suyamvaramae

oru naalum unai maravaadha inidhaana varam vaendum
uravaalum udal uyiraalum piriyadha varam vendum
vizhiyodu imai pole vilagaadha nilai vaendum
enai aalum ejamaane enai aalum ejamaane

suttu viral nee kaatu sonnapadi aaduven
unnadimai naan endru kayezhuthu poduven
unnuthiram pole naan ponnudalil ooduven
unnudalil nan odi ullazhagai theduven
thogai kondu nindraadum sengarumbu thegam
munthu varum thaen vaangi pandhi vaikum naeram 
ambugal pattu narambugal suttu vambugal enna varappugal vittu

kattilidum sootodu thottil kattu anname
mullaikkodi tharum andha pillaikkani vaendume
unnaiyoru saey polae en madiyil thaangavaa
ennudaiya thaalaatil kanmayangi thoongavaa
aariraaro nee paada aasai undu maane 
aaru aezhu kaetaalum petredupen naanae
muthinam varum muththu thinam endru siththiram varum visithiram endru

கங்கணகனவென கிண்கிணி மணிகளும் ஒலிக்க ஒலிக்க
எங்கெங்கிலும் மங்களம் மங்களம் எனும் ஒலி முழங்க முழங்க ஒரு சுயம்வரம் நடக்கின்றதே
இது சுகம் தரும் சுயம்வரமே

ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்
உறவாலும் உடல் உயிராலும் பிரியாத வரம் வேண்டும்
விழியோடு இமை போலே விலகாத நிலை வேண்டும்
எனை ஆளும் எஜமானே எனை ஆளும் எஜமானே

சுட்டு விரல் நீ காட்டு சொன்னபடி ஆடுவேன்
உன்னடிமை நான் என்று கையெழுத்து போடுவேன்
உன்னுதிரம் போலே நான் பொன்னுடலில் ஓடுவேன்
உன்னுடலில் நான் ஓடி உள்ளழகை தேடுவேன்
தோகை கொண்டு நின்றாடும் செங்கரும்பு தேகம்
முந்து வரும் தேன் வாங்கி பந்தி வைக்கும் நேரம்
அம்புகள் பட்டு நரம்புகள் சுட்டு வம்புகள் என்ன வரப்புகள் விட்டு

கட்டிலிடும் சூட்டோடு தொட்டில் கட்டு அன்னமே
முல்லைக்கொடி தரும் அந்த பிள்ளைக்கனி வேண்டுமே
உன்னையொரு சேய் போலே என் மடியில் தாங்கவா
என்னுடைய தாலாட்டில் கண்மயங்கி தூங்கவா
ஆரிராரோ நீ பாட ஆசை உண்டு மானே
ஆறு ஏழு கேட்டாலும் பெற்றெடுப்பேன் நானே
முத்தினம் வரும் முத்து தினம் என்று சித்திரம் வரும் விசித்திரம் என்று

Wednesday, April 29, 2020

engirundho azhaikum un geetham - எங்கிருந்தோ அழைக்கும் உன் கீதம்

engirundho azhaikum un geetham enuyiril kalandhe adhu paadum
saernthidavae unaye oooo aengiduthe maname

vasanthamum ingae vandhathendru vaasanai malargal sonaalum
thendralum ingae vandhu nindru inbathin geetham thanthaalum
nee indri aedhu vasantham ingae nee indri aedhu jeevan ingae
saernthidave unayae oooo..

எங்கிருந்தோ அழைக்கும் உன் கீதம் என்னுயிரில் கலந்ததே அது பாடும் 
சேர்ந்திடவே உனையே ஓஒ ஏங்கிடுதே மனமே 

வசந்தமும் இங்கே வந்ததென்று வாசனை மலர்கள் சொன்னாலும் 
தென்றலும் இங்கே வந்து நின்று இன்பத்தின் கீதம் தந்தாலும் 
நீ இன்றி ஏது வசந்தம் இங்கே நீ இன்றி ஏது ஜீவன் இங்கே 
சேர்ந்திடவே உனையே ஓஒ 


Saturday, January 30, 2016

naanoru sindhu - நானொரு சிந்து

naanoru sindhu kaavadi sindhu 
ragam puriyavilla ulla sogam theriyavilla
thanthai irunthum thaayum irunthum sondham edhuvum illa
adha solla theriyavilla

illadha uravukku enenna paero 
naadodi paatuku thaaythanthai yaaro
vidhiyodu naanaadum vilayaata paaru 
vilayaadha kaatuku vedhai pottadhaaru
paatupadicha sangathi undu 
en paatukkulayum sangathi undu kandupidi

penkandru pasu thedi paarkindra vaelai 
ammanu sollavum adhikaaram illai
en vidhi appodhe therinthirunthaale 
karpathil naane karanchirupaenae
thalai ezhuthaenna 
en mudhal ezhuthaenna sollungalaen

நானொரு சிந்து காவடி சிந்து 
ராகம் புரியவில்ல உள்ள சோகம் தெரியவில்ல 
தந்தை இருந்தும் தாயும் இருந்தும் சொந்தம் எதுவும் இல்ல 
அத சொல்ல தெரியவில்ல 

இல்லாத உறவுக்கு என்னென்ன பேரோ 
நாடோடி பாட்டுக்கு தாய் தந்தை யாரோ 
விதியோடு நானாடும் விளையாட்ட பாரு 
விளையாத காட்டுக்கு  வித போட்டதாரு 
பாட்டுப் படிச்சா சங்கதி உண்டு 
என் பாட்டுக்குள்ளேயும் சங்கதி உண்டு கண்டுபிடி 

பெண்கன்று பசு தேடி பார்க்கின்ற வேளை 
அம்மான்னு சொல்லவும் அதிகாரம் இல்லை 
என் விதி அப்போதே தெரிஞ்சிருந்தாலே 
கர்ப்பத்தில் நானே கரஞ்சிருப்பேனே 
தலை எழுத்தென்ன 
என் முதல் எழுத்தென்ன சொல்லுங்களேன் 

poova eduthu oru - பூவ எடுத்து ஒரு

poova eduthu oru maala thoduthu vaechaene en chinna raasa
un tholukkagha thaan indha maalai aengudhu
kalyaanam kacheri eppodhu

kaathula soodam pola karayuren unaala 
kannaadi vala munnaadi vizha en dhegam melinjaachu
kalyaana varam unnaala perum nanaala nenachaachu
chinna vayasu pulla kanni manasukulla vanna kanavu vanthathe
kalyaanam kacheri eppodhu

vaadaiya veesum kaathu valaikkudhe ena paathu
vaangalaen naeram paathu vanthu enna kaappathu
kuthaala mazha emaela vizha apodhum soodaachu
epodhum ena thapaatha anai en dhegam aedaachu
manja kulikkayila nenjam eryidhunga konjam anaichukollayaa
kalyaanam kacheri epodhu

பூவ எடுத்து ஒரு மால தொடுத்து வெச்சேனே என் சின்ன ராசா
உன் தோளுக்காக தான் இந்த மால ஏங்குது கல்யாணம் கச்சேரி எப்போது

காத்துல சூடம் போல கரையுறேன் உன்னால
கண்ணாடி வள முன்னாடி விழ என் தேகம் மெலிஞ்சாச்சு
கல்யாண வரம் உன்னால பெரும் நன்னாள நெனச்சாச்சு
சின்ன வயசு புள்ள கன்னி மனசுக்குல வண்ண கனவு வந்ததே
கல்யாணம் கச்சேரி எப்போது

வாடைய வீசும் காத்து வளைக்குதே எனை பாத்து
வாங்களேன் நேரம் பாத்து வந்து என்ன காப்பாத்து
குத்தால மழை எம்மேல விழ அப்போதும் சூடாச்சு
எப்போதும் என தப்பாத ஆணை என் தேகம் ஏடாச்சு
மஞ்ச குளிக்கயில நெஞ்சம் எரியுதுங்க கொஞ்சம் அணைச்சுக் கொள்ளையா
கல்யாணம் கச்சேரி எப்போது

poongaatru thirumbuma - பூங்காத்து திரும்புமா

poongaatru thirumbuma en paata virumbuma
paaratta madiyil veachu thaaraata enakoru thaaymadi kedaikuma

raasave varuthama aagayam surunguma
aengadhe adha ulagam thaangadhe
adukuma sooriyan karukumaa

enna solluven en ullam thaangala
metha vaangunen thookatha vaangala
indha vaedhana yaarukuthaan illa
unna minjavae oorukkul aal illa
aedho en paatukku naan paatu paadi sollaadha sogatha sonnaenadi 
soga raagam sogam thaanae
yaaradhu poradhu
kuyil paadalaam than mugam kaatumaa

ulla azhuguren veliyil sirikuren
nalla veshanthaan veluthu vaanguren
unga vaeshanthaan konjam maaranum
enga samiku magudam aeranum
maane en nenjuku paal vaartha thaene munne en paarvaiku vaa vaa penne
esaipaatu padichen naane
poonguyil yaaradhu
konjam paarunga penkuyil naanunga

adi needhaana andha kuyil yaar veetu sondha kuyil
aathaadi manasukkulla kaathaadi paranthathe ulagamae maranthathe
naanthaanae andha kuyil thaanaaga vantha kuyil
aathaadi manasukkulla kaathaadi paranthatha ulagamae maranthatha


பூங்காத்து திரும்புமா என் பாட்ட விரும்புமா 
பாராட்ட மடியில் வெச்சு தாராட்ட எனக்கொரு தாய்மடி கெடைக்குமா 

ராசாவே வருத்தமா ஆகாயம் சுருங்குமா 
ஏங்காதே அத உலகம் தாங்காதே 
அடுக்குமா சூரியன் கருக்குமா 

என்ன சொல்லுவேன் என் உள்ளம் தாங்கல 
மெத்த வாங்குனேன் தூக்கத்த வாங்கல 
இந்த வேதனை யாருக்கு தான் இல்ல 
உன்ன மிஞ்சவே ஊருக்குள் ஆளில்லை 
ஏதோ என் பாட்டுக்கு நான் பாட்டு பாடி சொல்லாத சோகத்த சொன்னேனடி  
சோக ராகம் சோகம் தானே 
யாரது போறது 
குயில் பாடலாம் தன முகம் காட்டுமா 

உள்ள அழுகுறேன் வெளியில் சிரிக்கிறேன் 
நல்ல வேஷந்தான் வெளுத்து வாங்குறேன் 
உங்க வேஷந்தான் கொஞ்சம் மாறணும்  
எங்க சாமிக்கு மகுடம் ஏறணும் 
மானே என் நெஞ்சுக்கு பால் வார்த்த தேனே முன்னே என் பார்வைக்கு வா வா பெண்ணே 
இசைப்பாட்டு படிச்சேன் நானே 
பூங்குயில் யாரது 
கொஞ்சம் பாருங்க பெண்குயில் நானுங்க 

அடிநீதானாஅந்த குயில் யார் வீட்டு சொந்தகுயில்
ஆத்தாடி மனசுக்குள்ள காத்தாடி பறந்ததே உலகமே மறந்ததே 
நான்தானே அந்த குயில் 
தானாக வந்த குயில்
ஆத்தாடி மனசுக்குள்ள காத்தாடி பறந்ததா உலகந்தான் மறந்ததா