Saturday, July 18, 2015

என் வீட்டு ஜன்னல் - en veettu jannal

என் வீட்டு ஜன்னல் எட்டி ஏன் பாக்குற 
இள நெஞ்ச தொட்டு தொட்டு நீ தாக்குற 
கண்ணாலே பேசாதே கல்யாணம் பேசு 
கையோடு கை சேர்த்து பூங்காத்தா வீசு 
மருதாணி அரச்சு வெச்சேன் மஞ்சத்தண்ணி கரைச்சு வெச்சேன் ராசா ராசா 
உருகாம உருகி நின்னேன் உன் அழக பருகி வந்தேன் ராசா ராசா 

பாட்டு ஒரு பாட்டு புது பாட்டு இசை போட்டு முந்தானை தந்தானம் பாட 
கேட்டு அதை கேட்டு கிரங்காமல் சுருதி மீட்டு நெஞ்சோரம் ஸ்ரிங்காரம் தேட 
வயலோரம் வரப்போரம் தினம் காத்திருந்து வாட 
இரு தொழில் ஒரு மாலை இது ராத்திரியில் சூட 
நான் உறவாய் வரவா தரவா 

பாடு நடை போடு அழகோடு உறவாடு ஆகாயம் கிட்டே வராது 
போடு திரைபோடு முத்தாடி விளையாடு முச்சூடும் என்னை விடாது 
வருவேனே வருவேனே சிறு பூப்பரித்திட தானே 
வரம் நானே பெறுவேனே நீ மன்மத மலை தேனே 
நான் உறவாய் வரவா தரவா 

இந்த மான் - indha maan

இந்த மான் உந்தன் சொந்த மான் பக்கம் வந்து தான் சிந்து பாடும் 
சிந்தைக்குள் ஆடும் ஜீவனே கண்மணியே 
சந்திக்க வேண்டும் தேவியே என்னுயிரே 

வேல்விழி போடும் தூண்டிலே நான் விழலானேன் கூண்டிலே 
நூலிடை தேயும் நோயிலே நான் வரம் கேட்கும் கோயிலே 
அன்னமே ....
அன்னமே எந்தன் சொர்ணமே உந்தன் எண்ணமே வானவில் வண்ணமே 
கன்னமே மதுக்கிண்ணமே அதில் பொன்மணி வைரங்கள் மின்னுமே 
எண்ணமே தொல்லை பண்ணுமே பெண் என்னும் கங்கைக்குள் பேரின்பமே 

பொன்மணி மேகலை ஆடுதே உன் விழி தான் இடம் தேடுதே 
பெண் உடல் பார்த்ததும் நாணுதே இன்பத்தில் வேதனை ஆனதே 
என் அத்தான்....
என் அத்தான் உன்னை எண்ணித்தான் உடல் மின்னத்தான் வேதனை பின்னத்தான் 
சொல்லித்தான் நெஞ்சை கிள்ளித்தான் என்னை சொர்கத்தில் தேவனும் சோதித்தான் 
மோகந்தான் சிந்தும் தேகந்தான் தாகத்தில் நான் நிற்க ஆனந்தம் தான் 

Friday, July 17, 2015

ராஜ ராஜ சோழன் - raaja raaja cholan

ராஜ ராஜ சோழன் நான் 
எனை ஆளும் காதல் தேசம் நீதான் 
பூவே காதல் தீவே 
மண்மீது சொர்க்கம் வந்து பெண்ணாக ஆனதே 
உல்லாச பூமி இங்கு உண்டானதே 

கண்ணோடு கண்கள் ஏற்றும் கற்பூர தீபமே 
கைதீண்டும் போது பாயும் மின்சாரமே 
உல்லாச மேடை மேலே ஓரங்க நாடகம் 
இன்பங்கள் பாடம் சொல்லும் என் தாயகம் 
இங்கங்கு ஊஞ்சலாக நான் போகிறேன் 
அங்கங்கு ஆசை தீயில் நான் வேகிறேன் 
உன் ராக மோகனம் என் காதல் வாகனம் 
செந்தாமரை செந்தேன்மழை என் ஆவி நீயே தேவி 

கள்ளூர பார்க்கும் பார்வை உள்ளூர பாயுமே 
துள்ளாமல் துள்ளும் உள்ளம் சல்லாபமே 
வில்லோடு அம்பு ரெண்டு கொல்லாமல் கொல்லுதே 
பெண் பாவை கண்கள் என்று பொய் சொல்லுதே 
முந்தானை மூடும் ராணி செல்வாக்கிலே 
என் காதல் கண்கள் போகும் பல்லாக்கிலே 
தேனோடை ஓரமே நீராடும் நேரமே 
புல்லாங்குழல் தள்ளாடுமே பொன்மேனி கேளாய் ராணி 

இளைய நிலா - ilaya nila

இளைய நிலா பொழிகிறதே 
இதயம் வரை நனைகிறதே 
உலாப்போகும் மேகம் கனாக்கானுமே விழாக்காணுமே வானமே 

வரும் வழியில் பனிமழையில் பருவ நிலா தினம் நனையும் 
முகிலெடுத்து முகம் துடைத்து விடியும் வரை நடை பழகும் 
வான வீதியில் மேக ஊர்வலம் காணும் போதிலே ஆறுதல் தரும் 
பருவமகள் விழிகளிலே கனவு வரும் 

முகிலினங்கள் அலைகிறதே முகவரிகள் தொலைந்தனவோ 
முகவரிகள் தவறியதால் அழுதிடுமோ அது மழையோ 
நீலவானிலே வெள்ளி ஓடைகள் ஓடுகின்றதே என்ன ஜாடைகள் 
விண்வெளியில் விதைத்தது யார் நவமணிகள் 

என் இனிய பொன் - en iniya pon

என் இனிய பொன் நிலாவே 
பொன் நிலவில் என் கனாவே 
நினைவிலே புது சுகம் 
தொடருதே தினம் தினம் 

பன்னீரை தூவும் மழை சில்லென்ற காற்றின் அலை சேர்ந்தாடும் எந்நேரமே  
என் நெஞ்சில் என்னனவோ வண்ணங்கள் ஆடும்திலை என் ஆசை உன்னோரமே 
வெண்நீல வானில் அதில் என்னென்ன மேகம் 
ஊர்கோலம் போகும் அதின் உள்ளாடும் தாகம் 
புரியாதோ என் எண்ணமே அன்பே 

பொன்மாலை நேரங்களே என் இன்ப ராகங்களே பூவான கோலங்களே 
தென்காற்றின் இன்பங்களே தேனாடும் ரோஜாக்களே என்னென்ன ஜாலங்களே 
கண்ணோடு தோன்றும் சிறு கண்ணீரில் ஆடும் 
கைசேரும் காலம் அதை என் நெஞ்சம் தேடும் 
இது தானே என் ஆசைகள் அன்பே 

இது ஒரு பொன்மாலை - idhu oru ponmaalai

இது ஒரு பொன்மாலை பொழுது 
வானமகள் நாணுகிறாள் வேறு உடை பூணுகிறாள் 

ஆயிரம் நிறங்கள் ஜாலமிடும் ராத்திரி வாசலில் கோலமிடும் 
வானம் இரவுக்கு பாலமிடும் பாடும் பறவைகள் தாளமிடும் 
பூமரங்கள் சாமரங்கள் வீசாதோ 

வானம் எனக்கொரு போதிமரம் நாளும் எனக்கது  சேதிதரும்
ஒரு நாள் உலகம் நீதி பெரும் திருநாள் நிகழும் தேதி வரும் 
கேள்விகளால் வேள்விகளை நான் செய்வேன்

நான் தேடும் - naan thedum

நான் தேடும் செவ்வந்தி பூவிது 
ஒரு நாள் பார்த்து அந்தியில் பூத்தது 
பூவோ இது வாசம் போவோம் இனி காதல் தேசம் 

பறந்து செல்ல வழியில்லையோ பருவக் குயில் தவிக்கிறதே 
சிறகிரண்டும் விரித்துவிட்டேன் இளமையது தடுக்கிறதே 
பொன்மானே என் யோகந்தான் பெண்தானோ சந்தேகந்தான் 
என் தேவி.....
உன் விழி ஓடையில் நான் கலந்தேன் உன் கனி விழுமென தவம் கிடந்தேன் 
பூங்காற்று சூடாச்சு ராஜாவே யார் மூச்சு 

மங்கைக்குள் என்ன நிலவரமோ மஞ்சத்தில் விழும் நிலை வருமோ 
அன்னத்தை எந்தன் விரல் தொடுமோ என்றைக்கும் அந்த சுகம் வருமோ 
தள்ளாடும் பெண் மேகந்தான் எந்நாளும் உன் வானம் நான் 
என் தேவா.....
கண்மலர் மூடிட ஏன் தவித்தேன் என் விரல் நகங்களை தினம் இழந்தேன் 
தாலாட்டு பாடாமல் தூங்காது என் பிள்ளை