Saturday, May 18, 2013

சந்தைக்கு வந்த கிளி - Sandhaikku vantha kili

Sandhaiku vantha kili சந்தைக்கு வந்த கிளி சாடை சொல்லி பேசுதடி
முத்தம்மா முத்தம்மா பக்கம் வர வெக்கமா
குத்தாலத்து மானே கொத்து பூவாடிடும் தேனே

காணாத காட்சி எல்லாம் கண்டேனே உன் அழகில்
பூப்போல கோலமெல்லாம் போட்டாயே உன் விழியில்
மானாமதுரையில மல்லிகைப்பூ வாங்கி வந்து
மை போட்டு மயக்கினியே கைதேர்ந்த மச்சானே
தாமரையும் பூத்திருச்சு தக்காளி பழுத்திருச்சி
தங்கமே உன் மனசு இன்னும் பழுக்கலையே
இப்பவே சொந்தம் கொண்டு நீ கையில் அள்ளிக்கொள்ளு மாமா

சந்தைக்கு வந்த மச்சான் சாடை சொல்லி பேசுவதேன்
சொல்லவா சொல்லவா ஒண்ணு நான் சொல்லவா
கல்யாணத்த பேசி நீ கட்ட வேணும் தாலி
ஆளான நாள் முதலாய் உன்னதான் நான் நெனச்சேன்
நூலாக தான் இளைச்சு நோயில் தினம் வாடி நின்னேன்
பூ முடிக்கும் கூந்தலிலே என் மனச நீ முடிச்ச
நீ முடிச்ச முடிப்பினிலே என் உசுரு தினம் தவிக்க
பூவில் நல்ல தேனிருக்கு பொன் வண்டு பாத்திருக்கு
இன்னும் என்ன தாமதமோ மாமனுக்கு சம்மதமோ
இப்பவே சொந்தம் கொள்ளவே கொஞ்சம் என் அருகில் வாம்மா

சொர்கமே என்றாலும் - Sorgame Endraalum

சொர்கமே என்றாலும் அது நம்மூர போல வருமா
எந்நாடு என்றாலும் அது நம் நாட்டுக் ஈடாகுமா
பல தேசம் முழுதும் பேசும் மொழிகள் தமிழ் போல் இனித்திடுமா

ஏரிக்கரை காத்தும் ஏலேலேலோ பாட்டும் இங்க ஏதும் கேக்கவில்லையே
பாடும் குயில் சத்தம் ஆடும் மயில் நித்தம் பாக்க ஒரு சோலை இல்லையே
வெத்தலைய மடிச்சி மாமன் அத கடிச்சு துப்ப ஒரு வழி இல்லையே
ஒடி வந்து குதிச்சு முங்கி முங்கி குளிச்சு ஆட ஒரு ஓடை இல்லையே
இவ்வூரு என்ன ஊரு நம்மூரு ரொம்ப மேலு
ஓடும் பல காரு வீண் ஆடம்பரம் பாரு
ஒரு தாகம் தீர்க்க ஏது மோரு

மாடு கண்ணு மேய்க்க மேயுறத பாக்க மந்தவெளி இங்கு இல்லையே
ஆடு புலி ஆட்டம் போட்டு விளையாட அரசமர மேடையில்லையே
காளை ரெண்டு பூட்டி கட்ட வண்டி ஒட்டி கானம் பாட வழி இல்லையே
தோழிகளை அழைச்சு சொல்லி சொல்லி ரசிச்சு ஆட்டம் போட முடியலையே
ஒரு எந்திரத்த போல அட இங்கே உள்ள வாழ்க்கை
இத எங்கே போயி சொல்ல மனம் இஷ்டப்படவில்லை
நம்மூர போல ஊரும் இல்ல

ஊரு விட்டு ஊரு வந்து - Ooru vittu ooru vanthu

ஊரு விட்டு ஊரு வந்து காதல் கீதல் பண்ணாதீங்க
பேரு கேட்டு போனதுன்னா நம்ம பொழப்பு என்னாகுங்க

விட்டுடு தம்பி இது வேணாம் தம்பி
இத்தன பேரு வீடு உங்கள நம்பி

அண்ணாச்சி என்ன எப்போதும் நீங்க தப்பாக எண்ண வேணாம்
பொண்ணால கேட்டு போவேனோ என்று ஆராய்ச்சி பண்ண வேணாம்
ஊருல உலகத்துல எங்க கதை போலேதும் நடக்கலையா
வீட்டையும் மறந்து விட்டு வேற ஒரு நாட்டுக்கு ஓடலையா
மன்மத லீலையை வென்றவர் உண்டோ
மங்கை இல்லாதொரு வெற்றியும் உண்டோ
காதல் ஈடேற பாடு என் கூட

ஆணா பொறந்தா எல்லாரும் பொண்ண அன்பாக எண்ண வேணும்
வீணா திரிஞ்சா ஆனந்தம் இல்ல வேறென்ன சொல்ல வேணும்
வாழ்க்கைய ரசிக்கணுன்னா வஞ்சி கோடி வாசனை பட வேணும்
வாலிபம் இனிக்கணுன்னா பொண்ண கொஞ்சம் ஆசையில் தொட வேணும்
கன்னிய தேடுங்க கற்பனை வரும்
கண்டதும் ஆயிரம் காவியம் வரும்
காதல் இல்லாம பூமி இங்கேது

Tuesday, April 30, 2013

போறாளே பொன்னுத்தாயி - Poraale ponnuthaayi

போறாளே பொன்னுத்தாயி போகிற போக்கில் மனசத்தொட்டு
தர பாக்கும் கருதப் போல வெக்கப்பட்டு
போறாளே பொன்னுத்தாயி புழுதிக்காட்டுல மனச விட்டு
உள்ளூரு பொல்லாப்புக்குக் கட்டுப்பட்டு

வெள்ளாமை நீதான் வெள்ளாடு நான்தான்
வெக்கத்த விட்டுத்தள்ளம்மா
வெள்ளாமை காட்ட விட்டுத்தரமாட்டா
பண்பாடு கட்டிக்காக்கும் பட்டிக்காட்டு கருத்தம்மா

படிக்காத புள்ள மனசெல்லாம் வெள்ள
இவளது நாக்கில போக்கில மனசில கள்ளமில்ல
உம்மேல கிறுக்கு உள்ளூர இருக்கு
வாய் விட்டு சொல்ல தானே தோது இல்ல தோது இல்ல
வைகைக்கு கடல சேர யோகமில்ல யோகமில்ல
அது சரி வியாழனும் வெள்ளியும் இருப்பது தூரமில்ல

நீ கண்ட வள்ளி சப்பாத்தி கள்ளி
கள்ளியின் இலையிலும் காயிலும் கனியிலும் முள்ளிருக்கும்
அடி போடிக் கள்ளி நீதாண்டி அல்லி
கண்டாங்கி சேலை கட்டும் கண்ணகியே கண்ணகியே
உன் கொசுவத்தில் உசுரக் கட்டி கொல்லுறியே கொல்லுறியே
வர வர பொம்பள பொழப்பையே வம்புல மாட்டுறியே

தாலாட்டும் பூங்காற்று - Thaalaattum poongaatru

தாலாட்டும் பூங்காற்று நான் அல்லவா
நீ கேட்டு பாராட்டு ஓ மன்னவா
வருவாயோ வாராயோ ஓ நெஞ்சமே ஓ நெஞ்சமே
என் நெஞ்சமே உன் தஞ்சமே

நள்ளிரவில் நான் கண் விழிக்க உன் நினைவில் என் மெய் சிலிர்க்க
பஞ்சணையில் நீ முள் விரித்தாய் பெண் மனதை நீ ஏன் பறித்தாய்
ஏக்கம் தியாக ஏதோ நோயாக காணும் கோலங்கள் யாவும் நீயாக
வாசலில் மன்னா உன் தேர் வர ஆடுது பூந்தோரணம்

எப்பொழுதும் உன் சொப்பனங்கள் முப்பொழுதும் உன் கற்பனைகள்
சிந்தனையில் நம் சங்கமங்கள் ஒன்றிரண்டா என் சஞ்சலங்கள்
காலை நான் பாடும் காதல் பூபாளம் காதில் கேட்காதோ கண்ணா எந்நாளும்
ஆசையில் நான் தோறும் நான் தொழும் ஆலயம் நீயல்லவா

Saturday, April 27, 2013

கோழி கூவும் நேரம் ஆச்சு - Kozhi koovum neram aachu

வந்தேன் வந்தேன் வந்தேன் கதையின் சூத்திரதாரி
தந்தேன் தந்தேன் தந்தேன் வணக்கம் சபையினை நாடி
காதல் தேவதை போலே இங்கொரு பெண் சிலை ஒன்று
கண்ணில் இத்தனை சோகம் வந்தது ஏன் அதில் இன்று
அழகான மணவாளன் காதலின் வசமானாள்
உயிரோடு உயிர் சேர்ந்து அன்றிலைப் போலானாள்
இரவெல்லாம் முதலிரவாக அவர் வாழும் ஒரு நாள் காலையில்
துயில் மேவும் அவள் மணவாளன் தனை மங்கை எழுப்புகின்றாள்

கோழி கூவும் நேரம் ஆச்சு தள்ளிப் போ மாமா
கூத்து பாத்த சேதியெல்லாம் சொல்லிப் போ மாமா
விளையாடி விளையாடி பொழுதாகிப் போச்சு
விரல் தீண்டும் இடமெல்லாம் அடையாளமாச்சு
எந்திரி மாமா விழி ரெண்டும் உறங்காம சொருகுது சொருகுது

ஒரு நாழி இன்னும் கொஞ்சம் மயிலே மயிலே
உந்தன் இடையோடு விளையாட ஒத்துக்கொள் அம்மா
கோழி கூவும் நேரம் ஆச்சு தள்ளிப் போ மாமா
ஓடம் அங்கே காத்திருக்கு ஓடிப் போ மாமா
தண்ணீரில் தள்ளாடும் ஓடம் போலே அம்மாடி என் நெஞ்சம் தள்ளாடுதே
நெத்திலி மீனே மைவிழி மானே நெஞ்சிலே சாச்சுக்கோ
கோழி கூவும் நேரம் ஆச்சு தள்ளிப் போ மாமா
ஓடம் அங்கே காத்திருக்கு ஓடிப் போ மாமா

எப்போதும் மீனுண்டு கடலில தான் காதலியே
கடல் எங்கே போய் விடும் சொல்லு
கோழி கூவும் நேரம் ஆச்சு தள்ளிப் போ மாமா
ஓடம் அங்கே காத்திருக்கு ஓடிப் போ மாமா
ஓடத்தை ஒட்டியே களைப்பாகி போனேன்
ராசாத்தி முழு நாளும் ரசமாக இருக்கோணும்
கோழி கூவும் நேரம் ஆச்சு தள்ளிப் போ மாமா
ஓடம் அங்கே காத்திருக்கு ஓடிப் போ மாமா

காதலி சொன்னது வேதம் என்று
புயல் வரும் வேளையில் அவன் போனான்
இந்திய எல்லையை தாண்டும் போது
பாவிகள் சுட்டதில் பலியானான்
காதலன் மாண்டான் மீனவர் சொன்னார்
எனினும் அவள் மனம் நம்பாது
ஒரு தினம் வருவான் தலைமகன் என்றே தனிமையில் ஆடி சிலையானாள்

Monday, April 22, 2013

சந்திரனை தொட்டது - Chandiranai thottadhu yaar

சந்திரனை தொட்டது யார் ஆம்ஸ்ட்ராங்கா அடி ஆம்ஸ்ட்ராங்கா
சத்தியமாய் தொட்டது யார் நான் தானே அடி நான் தானே
கனவு தேவதையே நிலவு நீதானே உன் நிழலும் நான் தானே

சந்திரனை தொட்டது யார் நீதானா அது நீதானா
சத்தியமாய் தொட்டவனும் நீதானா அது நீதானா
நெருங்கி தொட்டவனே நிலவு நான் தானோ உன் நிலவு நான் தானோ

பூக்களை செடி கொடியின் பொருள் என்று நினைத்திருந்தேன்
பூவை உன்னை பார்த்த பின்னே பூக்களின் மொழி அறிந்தேன்
தலையணை என்பதெல்லாம் தலைக்கென்று நினைத்திருந்தேன்
தலைவனை பிரிகையிலே தலையணை துணை அறிந்தேன்
தீப்பந்தம் போன்றவன் நான் தீபமென்று ஆகிவிட்டேன்
புயலுக்கு பிறந்தவள் நான் தென்றல் என்று மாறி விட்டேன்
கருங்கல்லை போன்றவன் நான் கற்பூரமாகி விட்டேன்

தாமரை மலர் கொண்டு உடல் செய்த ஓவியமே
என் உடல் பாரம் மட்டும் எந்த விதம் தாங்குகிறாய்
மீன்களை சுமப்பதொன்றும்சுமப்பிதிலே நீருக்கு பாரமில்லை
காதலை சுமக்கையிலே காதலனும் பாரமில்லை
சொர்க்கத்துக்கு வந்து விட்டோம் தர்க்கத்துக்கு நேரமில்லை
முத்தங்களை நீ வழங்கு இதழுக்கு ஈரமில்லை
தொடங்குதல் மிக ஏளிது முடிப்பதுதான் பெரிய தொல்லை