Saturday, June 13, 2015

டாண்டியா ஆட்டமும் - dandiya aatamum

டாண்டியா ஆட்டமும் ஆட தசரா கூட்டமும் கூட 
குஜராத் குமரிகளாட காதலன் காதலியை தேட 
அவள் தென்படுவாளோ எந்தன் கண் மறைவாக 
நின்று காதல் சொல்வாளோ நெஞ்சோடு 
அவள் எங்கே என காணாமல் வாட என்னைத்தான் ஏங்க வைப்பாளோ 

உன்னைக் கண்டு எண்ணம் யாவும் மெல்ல ஊமையாகி நின்றதென்ன சொல்ல
நூறு வார்த்தை அல்ல அல்ல ஒரு வார்த்தை புரியாதா 
எந்த வார்த்தை சொல்லவில்லையோ நீ அந்த வார்த்தை எந்தன் கண்களால் நான் 
நூறு ஜாடையில் சொன்னேன்னு தெரியாதா புரியாதா 
மையை போல நான் உன் கண்ணில் சேர வேண்டும் 
பூவை போல நானும் உந்தன் கூந்தல் சேர வேண்டும் 
கண்ணில் வைத்த மையும் கரைந்து போக கூடும்
கூந்தல் வைத்த வண்ணப்பூவும் வாடிப்போக கூடும் 
சரி காதல் நெஞ்சை நான் தரலாமா உன் கணவனாக நான் வரலாமா 
இந்த வார்த்தை மட்டுமே நிஜமானால் ஒரு ஜென்மம் போதும் 
உயிரே வா அன்பே வா (2)

காதல் பார்வைகள் எல்லாமே அழகு காதல் வார்த்தைகள் எல்லாமே கவிதை 
காதல் செய்வதே எந்நாளும் தெய்வீகம் 
காதல் என்பதை கண்டுபிடித்தவன் காலம் முழுவதும் நன்றிக்குரியவன் 
காதல் இல்லையேல் இல்லையே என்னாகும் பூலோகம் 
உள்ளம் என்ற ஒன்றை உன்னிடத்தில் தந்தேன் தந்த உள்ளம் பத்திரமா தெரிந்து கொள்ள வந்தேன் 
என்னைப் பற்றி நீ தான் எண்ணியது தவறு என்னை விட உந்தன் உள்ளம் என்னுடைய உயிரு 
இரு உயிர்கள் என்பது கிடையாது இங்கு உனது எனது என்ற பிரிவேது 
இந்த வார்த்தை மட்டுமே நிஜமானால் ஒரு ஜென்மம் போதும் 
உயிரே வா அன்பே வா (2)

வாலிப நெஞ்சங்கள் உறவு கொண்டாட வந்தது இங்கொரு ராத்திரி 
தாண்டியா என்றொரு ராத்திரி 
துணை செய்ய நாங்கள் உண்டு தோழனே துணிந்து நீ காதல் செய்வாய் தோழியே 
உங்களாலே என்றும் மண்ணில் காதல் வாழுமே

Wednesday, June 10, 2015

அந்த சிவகாமி மகனிடம் - andha sivagami maganidam

அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி 
என்னை சேரும் நாள் பார்க்க சொல்லடி 
வேறு எவரோடும் நான் பேச வார்த்தை ஏதடி 
வேலன் இல்லாமல் தோகை ஏதடி

கண்கள் சரவணன் சூடிடும் மாலை கன்னங்கள் வேலவன் ஆடிடும் சோலை 
பெண் என பூமியில் பிறந்த பின்னாலே வேலை வணங்காமல் வேறென்ன வேலை 
நெஞ்சே தெரியுமா அன்றொரு நாளிலே நிழலாடும் விழியோடும் ஆடினானே 
அன்று நிழலாடும் விழியோடும் ஆடினானே 
என்றும் கண்ணில் நின்றாட சொல்லடி

மலையின் சந்தனம் மார்பினில் சொந்தம் மங்கையின் இதயமோ காளையின் சொந்தம் 
நிலையில் மாறினால் நினைவும் மாறுமோ நெஞ்சம் நெருங்கினால் பேதங்கள் தோன்றுமோ 
காலம் மாறினால் காதலும் மாறுமோ (2) 
மாறாது மாறாது இறைவன் ஆணை (2)

இந்த சிவகாமி மகனுடன் சேர்ந்து நில்லடி 
இன்னும் சேரும் நாள் பார்ப்பதென்னடி  
வேறு எவரோடும் நான் பேச வார்த்தை ஏதடி 
தோகை இல்லாமல் வேலன் ஏதடி

அமைதியான நதியினிலே - amaithiyaana nathiyinile

அமைதியான நதியினிலே ஓடும் - ஓடம் 
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்
காற்றினிலும் மழையினிலும் கலங்க வைக்கும் இடியினிலும் 
கரையினிலே ஒதுங்கி நின்றால் வாழும் 

தென்னை இளம் கீற்றினிலே தாராட்டும் தென்றல் அது 
தென்னை தனை சாய்த்து விடும் புயலாக வரும்பொழுது  -- (அமைதியான)

ஆற்றங்கரை மேட்டினிலே அடி நிற்கும் நாணலது 
காற்றடித்தால் சாய்வதில்லை கனிந்த மனம் வீழ்வதில்லை  -- (அமைதியான)

நாணலிலே காலெடுத்து நடந்து வந்த பெண்மை இது 
நாணம் என்னும் தென்றலிலே தொட்டில் கட்டும் மென்மை இது -- (அமைதியான)

அந்தியில் மயங்கி விழும் காலையில் தெளிந்து விடும் 
அன்பு மொழி கேட்டு விட்டால் துன்ப நிலை மாறிவிடும் -- (அமைதியான)

ஆயிரம் நிலவே வா - aayiram nilave vaa

ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா 
இதழோரம் சுவை தேட புது பாடல் விழி பாட பாட 

நள்ளிரவு துணையிருக்க நாமிருவர் தனியிருக்க 
நாணமென்ன பாவமென்ன நடை தளர்ந்து போனதென்ன 
இல்லை உறக்கம் ஒரே மனம் என் ஆசை பாராயோ
என் உயிரிலே உன்னை எழுத உன் மேனி தாராயோ -- (ஆயிரம் நிலவே)

மன்னவனின் தோளிரண்டை மங்கை எந்தன் கை தழுவ 
கார்குழலும் பாய் விரிக்கும் கண்சிவந்த வாய் வெளுக்கும் 
இந்த மயக்கம் எழில் முகம் முத்தாக வேர்க்காதோ 
அந்த நினைவில் வந்து விழுந்தேன் கொத்தான பூவாக -- (ஆயிரம் நிலவே)

அல்லி மலர் மேனியிலே ஆடையென நானிருக்க 
கள்ள விழிப் பார்வையிலே காணும் இன்பம் கோடி பெரும் 
சின்ன இடையில் மலர் இதழ் பட்டாலும் நோகாதோ 
இன்பம் இதுவோ இன்னும் ஏதுவோ தந்தாலும் ஆகாதோ -- (ஆயிரம் நிலவே)

பொய்கை எனும் நீர் மகளின் பூவாடை போர்த்திருந்தாள் 
தென்றல் என்னும் காதலனின் கைவிலக்க வேர்த்து நின்றாள் 
என்ன துடிப்போ அவள் நிலை நீ உணர மாட்டாயோ 
அந்த நிலையில் தந்த சுகத்தை நான் உணர காட்டாயோ -- (ஆயிரம் நிலவே)

ஆலய மணியின் ஓசையை - aalaya maniyin oosaiyai

ஆலய மணியின் ஓசையை நான் கேட்டேன் 
அருள் மொழி கூறும் பறவைகள் மொழி கேட்டேன்

உன் இறைவன் அவனே அவனே எனப் பாடும் மொழி கேட்டேன் 
உன் தலைவன் அவனே அவனே எனும் தாயின் மொழி கேட்டேன் 

இலகும் மாலை பொழுதினிலே என் இறைவன் வந்தான் தேரினிலே 
ஏழையின் இல்லம் இது என்றான் இரு விழியாலே மாலையிட்டான்  -- (உன் இறைவன்)

காதல் கோயில் நடுவினிலே கருனைத்தேவன் மடியினிலே 
யாரும் அறியா பொழுதினிலே அடைக்கலம் ஆனேன் முடிவினிலே -- (உன் இறைவன்)

அடி என்னடி ராக்கம்மா - adi ennadi raakamma

அடி ராக்கு என் மூக்கு என் கண்ணு என் பல்லு என் ராஜாயி 

அடி என்னடி ராக்கம்மா பல்லாக்கு நெளிப்பு என் நெஞ்சு குலுங்குதடி 
சிறு கண்ணாடி மூக்குத்தி மாணிக்கச் சிவப்பு மச்சான இழுக்குதடி 

அஞ்சாறு ரூவாய்க்கு மணிமால உன் கழுத்துக்கு பொருத்தமடி 
அம்மூறு மீனாட்சி பாத்தாலும் அவ கண்ணுக்கு வருத்தமடி 
சின்னாலப்பட்டியிலே கண்டாங்கி எடுத்து என் கையாலே கட்டி விடவா 
என் அத்தை அவ பெத்த என் மெத்த என் ராக்கம்மா 
கொத்தோடு முத்து தரவோ 

தெய்வான சக்களத்தி வள்ளி குறத்தி நம்ம கதையிலே இருக்குதடி 
சிங்கார மதுரையில் வெள்ளையம்மா கதை தினம் தினம் நடக்குதடி 
அடி தப்பாமல் நான் உன்னை சிறையெடுப்பேன் ஒண்ணு ரெண்டாக இருக்கட்டுமே 
என் கண்ணு என் மூக்கு என் பல்லு என் ராஜாயி 
கல்யாண வைபோகமே

அடி ஆத்தாடி - adi aathaadi

அடி ஆத்தாடி இளமனசொன்னு ரெக்கை கட்டி பறக்குது சரிதானா 
அடி அம்மாடி ஒரு அலை வந்து மனசுல அடிக்குது அதுதானா 
உயிரோடு உறவாடும் ஒரு கோடி ஆனந்தம் 
இவன் மேகம் ஆக யாரோ காரணம் 

மேலே போகும் மேகம் எல்லாம் கட்டுப்பட்டு ஆடாதோ 
உன்ன பாத்து அலைகள் எல்லாம் மேட்டு கட்டி பாடாதோ 
இப்படி நான் ஆனதில்ல புத்தி மாறிப் போனதில்லை 
முன்ன பின்ன நேர்ந்ததில்ல மூக்கு நுனி வேர்த்ததில்ல 
கன்னிபொண்ணு கண்ணுக்குள்ள கத்திச்சண்ட கண்டாயோ
படபடக்கும் நெஞ்சுக்குள்ள பட்டாம்பூச்சி பாத்தாயோ 
இசை கேட்டாயோ (லலலா...)

தாகப்பட்ட நெஞ்சுக்குள்ளே ஏகப்பட்ட சந்தோசம் 
உண்மை சொல்லு பொண்ணே என்னை என்ன செய்ய உத்தேசம் 
வார்த்தை ஒண்ணு வாய்வரைக்கும் வந்து வந்து போவதென்ன 
கட்டு மரம் பூப்பூக்க ஆசைப்பட்டு ஆவதென்ன 
கட்டுத்தறி காளை நானே கன்னுக்குட்டி ஆனேனே 
தொட்டு தொட்டு தென்றல் பேச தூக்கம் கேட்டு போனேனே 
சொல் பொன்மானே -- (அடி ஆத்தாடி)