அமைதியான நதியினிலே ஓடும் - ஓடம்
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்
காற்றினிலும் மழையினிலும் கலங்க வைக்கும் இடியினிலும்
கரையினிலே ஒதுங்கி நின்றால் வாழும்
தென்னை இளம் கீற்றினிலே தாராட்டும் தென்றல் அது
தென்னை தனை சாய்த்து விடும் புயலாக வரும்பொழுது -- (அமைதியான)
ஆற்றங்கரை மேட்டினிலே அடி நிற்கும் நாணலது
காற்றடித்தால் சாய்வதில்லை கனிந்த மனம் வீழ்வதில்லை -- (அமைதியான)
நாணலிலே காலெடுத்து நடந்து வந்த பெண்மை இது
நாணம் என்னும் தென்றலிலே தொட்டில் கட்டும் மென்மை இது -- (அமைதியான)
அந்தியில் மயங்கி விழும் காலையில் தெளிந்து விடும்
அன்பு மொழி கேட்டு விட்டால் துன்ப நிலை மாறிவிடும் -- (அமைதியான)