Tuesday, June 30, 2015

காதலிக்கும் பெண்ணின் கைகள் - kaadhalikkum pennin kaigal

காதலிக்கும் பெண்ணின் கைகள் தொட்டு நீட்டினால் 
சின்ன தகரம் கூட தங்கம் தானே 
காதலிக்கும் பெண்ணின் வண்ண கன்னம் ரெண்டிலே 
மின்னும் பருவும் கூட பவளம் தானே

சிந்தும் வேர்வை தீர்த்தமாகும் 
சின்ன பார்வை மோட்சம் ஆகும் 
காதலின் சங்கீதமே ம்ம்ம்..பூமியின் பூபாளமே 

காதலிக்கும் பெண் வடிக்கும் கையெழுத்திலே 
கண்ட பிழைகள் கூட கவிதையாகுமே 
காதல் ஒன்றும் சுத்தம் கித்தம் பார்ப்பதில்லையே  
எச்சில் கூட புனிதமாகுமே
குண்டு மல்லி ரெண்டு ரூபாய் 
உன் கூந்தல் ஏறி உதிரும் பூ கோடி ரூபாய் 
பஞ்சு மிட்டாய் அஞ்சு ரூபாய் 
நீ பாதி தின்று தந்ததால் லட்ச ரூபாய்

காதல் ஒன்றும் நல்ல நேரம் பார்ப்பதில்லையே 
ராகு காலம் கூட ராசியாகுமே 
காதலுக்கு அன்னபட்சி தேவையில்லேயே 
காக்கை கூட தூது போகுமே
காதல் ஜோதி புகைவதில்லை 
காதல் என்றும் சுற்றமே பார்ப்பதில்லை 
இதில் அற்பமானதோ எதுவும் இல்லை 
இந்த நுட்பம் உனக்கு புரியவில்லை 

வானும் மண்ணும் மாறியே போகும் 
காதல் என்றும் வாழுமே 
ஆதாம் ஏவாள் பாடிய பாடல் காற்றில் என்றும் கேட்குமே 
காதல் கெட்ட வார்த்தையா என்ன யாரும் சொல்லலாம் 
நீ சொல்ல வேண்டும் இன்று 
காதல் முள்ளில் வேலியா என்ன யாரும் செல்லலாம் 
நீ செல்ல வேண்டும் இன்று

பிருந்தாவனமும் நந்தகுமாரனும் - brindavanamum nandakumaranum

பிருந்தாவனமும் நந்தகுமாரனும் 
யாவருக்கும் பொது செல்வமன்றோ 
ஏனோ ராதா இந்த பொறாமை 
யார்தான் அழகால் மயங்காதவரோ 

புல்லாங்குழலிசை இனிமையினாலே 
உள்ளமே ஜில்லென துள்ளாதா 
ராகத்திலே அனுராகமவினால் 
ஜகமே ஊஞ்சலில் ஆடாதா 

கண்ணனின் உன்னத லீலையை நினைத்தால் 
தன்னையே மறந்திட செய்யாதா 
ஏனோ ராதா இந்த பொறாமை 
யார்தான் அழகால் மயங்காதவரோ

செந்தாழம் பூவில் - senthaazham poovil

செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் என் மீது மோதுதம்மா 
பூவாசம் மேடை போடுதம்மா பெண் போல ஜாடை பேசுதம்மா 
அம்மம்மா ஆனந்தம் அம்மம்மா ஆனந்தம் 

வளைந்து நெளிந்து போகும் பாதை மங்கை மோக கூந்தலோ 
மயங்கி மயங்கி செல்லும் வெள்ளம் பருவ நாண ஊடலோ 
ஆலங்கொடி மேலே கிளி தேன் கனிகளை தேடுது 
ஆசை குயில் பாஷையின்றி ராகம் என்ன பாடுது
காடுகள் மலைகள் தேவன் கலைகள்

அழகு மிகுந்த ராஜகுமாரி மேகமாக போகிறாள் 
ஜரிகை நெளியும் சேலை கொண்டு மலையை மூட பார்க்கிறாள் 
பள்ளம் சிலர் உள்ளம் என ஏன் படைத்தான் ஆண்டவன்
பட்டம் தர தேடுகின்றேன் எங்கே அந்த நாயகன் 
மலையின் காட்சி இறைவன் ஆட்சி

இளைய பருவம் மலையில் வந்தால் ஏகம் சொர்க்க சிந்தனை 
இதழை வருடும் பனியின் காற்று கம்பன் செய்த வர்ணனை 
ஓடை தரும் வாடைக்காற்று வான் உலகை காட்டுது 
உள்ளே வரும் வெள்ளமொன்று ஏங்கோ என்னை கூட்டுது 
மறவேன் மறவேன் அற்புத காட்சி

சங்கீத ஜாதி முல்லை - sangeetha jaathi mullai

சங்கீத ஜாதி முல்லை காணவில்லை 
கண்கள் வந்தும் பாவையின்றி பார்வை இல்லை 
ராகங்கள் இன்றி சங்கீதம் இல்லை 
சாவொன்று தானா நம் காதல் எல்லை 
என் நாதமே வா....

திருமுகம் வந்து பழகுமோ 
அறிமுகம் செய்து விலகுமோ 
விழிகளில் துளிகள் வடியுமோ - அது 
சுடுவதை தாங்க முடியுமோ
கனவினில் எந்தன் உயிரில் உறவாகி 
விடிகையில் இன்று அழுது பிரிவாகி
தனிமையில் எந்தன் இதயம் சருகாகி உதிருமோ
திரைகள் இட்டாலும் மறைந்து கொள்ளாது 
அணைகள் இட்டாலும் வழியில் நில்லாது 
பொன்னி நதி கன்னி நதி ஜீவ நதி
விழிகள் அழுதபடி கரங்கள் தொழுதபடி 
சிறைகளும் பொடிபட வெளிவரும் ஒரு கிளி
இசையெனும் மழை வரும் இனி எந்தன் மயில் வரும் 
ஞாபக வேதனை மீறுமோ
ஆடிய பாதங்கள் காதலின் வேதங்கள் ஆடிடுமோ பாடிடுமோ ஆடிடுமோ பாடிடுமோ 

ராஜ தீபமே எந்தன் வாசலில் வாராயோ 
குயிலே...குயிலே...குயிலே...குயிலே...
உந்தன் ராகம் நெஞ்சில் நின்று ஆடும் 
ராஜ தீபமே....
நான் தேடி வந்த ஒரு கோடை நிலவு அவள் நீதானே நீதானே 
மன கண்ணில் நின்று பல கவிதை தந்த மகள் நீதானே நீதானே நீதானே 
விழியில்லை எனும் போது வழி கொடுத்தாய் 
விழி வந்த பின்னால் ஏன் சிறகொடித்தாய் 
நெஞ்சில் எங்கும் உந்தன் பிம்பம் 
சிந்தும் சந்தம் உந்தன் சொந்தம் 
தத்திச் செல்லும் முத்து சிற்பம் 
கண்ணுக்குள்ளே கண்ணீர்  வெப்பம் 
இன்னும் என்ன நெஞ்சில் அச்சம் கண்ணில் மட்டும் ஜீவன் மிச்சம்
முல்லை பூவில் முள்ளும் உண்டோ 
கண்டு கொண்டும் இந்த வேஷம் என்ன...ராஜ தீபமே....

ஏழு ஸ்வரங்களுக்குள் - yezhu swarangalukkul

ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல் 
இதய சுரங்கத்துள் எத்தனை கேள்வி 
காணும் மனிதருக்குள் எத்தனை சலனம் - வெறும்
கற்பனை சந்தோஷத்தில் அவனது கவனம்

காலை எழுந்தவுடன் நாளைய கேள்வி - அது 

கையில் கிடைத்த பின்னும் துடிக்குது ஆவி 
ஏன் என்ற கேள்வி ஒன்று என்றைக்கும் தங்கும் - மனிதன் 
இன்ப துன்பம் எதிலும் கேள்விதான் மிஞ்சும் 

எனக்காக நீ அழுதால் இயற்கையில் நடக்கும் 
நீ எனக்காக உணவு உண்டு எப்படி நடக்கும் 
நமக்கென்று பூமியிலே கடமைகள் உண்டு - அதை
நமக்காக நம் கையால் செய்வது நன்று

ஆரம்பத்தில் பிறப்பும் உன் கையில் இல்லை - என்றும் 
அடுத்தடுத்த நடப்பும் உன் கையில் இல்லை 
பாதை வகுத்த பின்பு பயந்தென்ன லாபம் 
அதில் பயணம் நடத்திவிடு மறைந்திடும் பாவம் 

நாளை பொழுது என்றும் நமக்கென வாழ்க - அதை 
நடத்த ஒருவன் உண்டு கோவிலில் காண்க 
வேளை பிறக்கும் என்று நம்பிக்கை கொள்க - எந்த 
வேதனையும் மாறும் மேகத்தை போல 

வான் மேகம் - vaan megam

வான் மேகம் பூப்பூவாய் தூவும் 
தேகம் என்னவாகும் 
இன்பமாக நோகும் 
மழைத்துளி தெரித்தது எனக்குள்ளே குளிர்த்தது 
நினைத்தது பலித்தது குடைக்கம்பி துளிர்த்தது 
வானம் முத்துக்கள் சிந்தி வாழ்கவென்றது 
காதல் வென்றது 
மேகம் வந்தது 
பூக்கள் சிந்துது 
ஆளுமில்லை சேர்த்தெடுக்க நூலுமில்லை கோர்த்தெடுக்க 

வானிலே வானிலே நீரின் தோரணங்களோ 
என் மனம் பொங்குதே என்ன காரணங்களோ 
அவன் விழி அசைத்ததில் இவள் மனம் அசைந்ததோ 
தளிர்க்கரம் பிடிக்கையில் மலர்க்கொடி சிலிர்த்ததோ 
சாலை எங்கும் இங்கே சங்கீத மேடை ஆனதோ 
பாடல் பாடுதோ தூறல் போடுதோ தோகை ஆடுதோ
பூமி எங்கும் கவியரங்கம் சாரல் பாடும் ஜலதரங்கம்

வா வா அன்பே அன்பே - vaa vaa anbe anbe

வா வா அன்பே அன்பே 
காதல் நெஞ்சே நெஞ்சே
உன் வண்ணம் உன் எண்ணம்
எல்லாமே என் சொந்தம் 
இதயம் முழுதும் எனது வசம்

நீலம் கொண்ட கண்ணும் நேசம் கொண்ட நெஞ்சும் 
காலம் தோறும் என்னை சேரும் கண்மணி 
பூவை இங்கு சூடும் பூவும் பொட்டும் யாவும்
மன்னன் எந்தன் பேரை கூறும் பொன்மணி 
காலை மாலை ராத்திரி காதல் கொண்ட பூங்கொடி 
ஆணை போடலாம் அதில் நீயும் ஆடலாம் 
நீ வாழத்தானே வாழ்கின்றேன் நானே 
நீயின்றி ஏது பூவைத்த மானே 
இதயம் முழுதும் எனது வசம் 

கண்ணன் வந்து துஞ்சும் கட்டில் இந்த நெஞ்சம் 
காதல் அல்ல காதல் என்னும் காவியம் 
அன்றும் இன்றும் என்றும் உந்தன் கையில் தஞ்சம் 
பாவை அல்ல பார்வை பேசும் ஓவியம்
காற்றில் வாங்கும் மூச்சிலும் கன்னி பேசும் பேச்சிலும் 
நெஞ்சமானது உந்தன் தஞ்சமானது 
உன் தோளில் தானே பூமாலை நானே 
சூடாமல் போனால் வாடாதோ மானே
இதயம் முழுதும் எனது வசம்