Saturday, June 13, 2015

ஏதேதோ எண்ணம் - aedhaedho ennam

ஏதேதோ எண்ணம் வளர்த்தேன் 
உன் கையில் என்னை கொடுத்தேன் 
நீதானே புன்னகை மன்னன் உன் ராணி நானே 
பண்பாடும் பாடகன் நீயே உன் ராகம் நானே 

சிலகாலமாய் நானும் சிறை வாழ்கிறேன் 
உன்னை பார்த்ததால் தானே உயிர் வாழ்கிறேன் 
தூக்கம் விழிக்கிறேன் பூக்கள் வளர்க்கிறேன்
சில பூக்கள் தானே மலர்கின்றது 
பல பூக்கள் ஏனோ உதிர்கின்றது 
பதில் என்ன கூறு பூவும் நானும் வேறு 

குலதெய்வமே எந்தன் குறை தீர்க்கவா 
கை நீட்டினேன் என்னை கரை சேர்க்கவா 
நீயே அணைக்கவாதீயை அணைக்கவா 
நீ பார்க்கும் போது பனியாகிறேன் 
உன் மார்பில் சாய்ந்து குளிர் காய்கிறேன் 
ஏது வந்த போதும் இந்த அன்பு போதும்

தரிசனம் கிடைக்காதா - dharisanam kidaikatha

தரிசனம் கிடைக்காதா 
என் மேல் கரிசனம் கிடையாதா கண்ணா 

பொய்யில்லை கண்ணுக்குள் தீ வளர்த்தேன் 
உன் பூஜைக்கு நெஞ்சுக்குள் பூ வளர்த்தேன் 
விழிகளில் வழிகிற துளிகளில் 
இவள் மனம் தினம் தினம் கரைகிற வரையிலும் கண்ணா

சின்ன மணிக்குயிலே - chinna manikuyile

சின்ன மணிக்குயிலே மெல்ல வரும் மயிலே 
எங்கே உன் ஜோடி நான் போறேன் தேடி 
எங்கே உன் ஜோடி இல்லாம கேட்டாக்க பதிலும் சொல்லாம
குக்கூ என கூவுவதேனடி கண்மணி கண்மணி 
பதில் சொல்லு நீ சொல்லு நீ

நில்லாத வைகையிலே நீராட போகையிலே 
சொல்லாத சைகியிலே நீ ஜாடை செய்கையிலே
கல்லாகி போனேன் நானும் கண் பார்த்தா ஆளாவேன் 
கைசேரும் காலம் வந்தா தோளோடு தோளாவேன் 
உள்ள கனத்ததடி ராகம் பாடி நாளும் தேடி நீ அடிக்கடி அணைக்கணும் 
கண்மணி கண்மணி பதில் சொல்லு நீ சொல்லு நீ

பட்டுத் துணி உடுத்தி உச்சி முடி திருத்தி 
எட்டு அடி எடுத்து எட்டி நடந்த புள்ளை 
உன் சேலை காத்தில் ஆட என் நெஞ்சும் சேர்ந்தாட 
உன் கூந்தல் வாசம் பாத்து என் எண்ணம் கூத்தாட 
மாராப்பு சேலையிலே நூலைப்போல நானிருக்க நான் சாமிய வேண்டுறேன் 
கண்மணி கண்மணி பதில் சொல்லு நீ சொல்லு நீ

அதிசய ராகம் - adhisaya ragam

அதிசய ராகம் ஆனந்த ராகம் அழகிய ராகம் அபூர்வ ராகம் 

வசந்த காலத்தில் மழை தரும் மேகம் 
அந்த மழை நீர் அருந்த மனதினில் மோகம் 
இசையெனும் அமுதினில் அவளொரு பாகம் 
இந்திரலோகத்து சக்கரவாகம் 

பின்னிய கூந்தல் கருநிற நாகம் 
பெண்மையின் இலக்கணம் அவளது தேகம் 
தேவர்கள் வளர்த்திடும் காவிய யாகம் 
அந்த தேவதை கிடைத்தால் அது என் யோகம் 

ஒரு புறம் பார்த்தால் மிதிலையின் மைதிலி 
மறுபுறம் பார்த்தால் காவிரி மாதவி 
முகம் மட்டும் பார்த்தால் நிலவின் எதிரொலி 
முழுவதும் பார்த்தால் அவளொரு பைரவி

ஏப்ரல் மேயிலே - april mayile

ஏப்ரல் மேயிலே பசுமையே இல்ல காஞ்சு போச்சுடா 
இந்த ஊரு பிடிக்கலே உலகம் பிடிக்கலே போரு போரு டா
இது தேவையா அட போங்கய்யா ஜூன் ஜுலையா 

பட்டாம்பூச்சிகள் பறக்குது பறக்குது 
கண்ணாமூச்சிகள் நடக்குது நடக்குது
பச்சைப் பசுமைகள் தெரியுது தெரியுது 
அழகு கிளிகள் நமது விழியில் வலம் வருதே 

குர்தா மாக்சியும் சல்வார் கமீசும் சுமந்த பெண்களே 
எங்கே என்றுதான் இங்கே இன்றுதான் வருந்தும் கண்களே 
வீட்டில் நிற்கிற காவல்காரனும் முறைச்சு பார்க்கிறான் 
சோளகொல்லையின் பொம்மை போலவே விரச்சு போகிறான் 
டிரைவ் இன் ஹோட்டல்-உம் சாந்தோம் பீச்சும் டல்-லாய் தோன்றுதே பாருங்கள் 
பன்னீர் பூக்களை பார்க்காதின்று கண்ணீர் வார்க்கிறோம் நாங்கள்
நெஞ்சம் தாங்குமா கண்கள் தூங்குமா துன்பம் நீங்குமா

காலேஜ் அழகியும் கான்வென்ட் குமரியும் தேட்டர் போகிறார் 
டாக்ஸி டிரைவரும் பாத்து பாத்து தான் மீட்டர் போடுவார் 
காலை மாலை தான் வேலை பார்ப்பவர் மகிழ்ச்சி கொள்கிறார்
வாலைக்குமரிகள் சாலை கடக்கையில் வாயை பிளக்கிறார் 
ஸ்டெல்லா மேரிஸ் உம் குயின் மேரிஸ் உம் தென்றல் வீசிடும் பூந்தோட்டம் 
வஞ்சிப் பாவைகள் தோன்றும் போது நெஞ்சம் போடுதே ஆட்டம் 
எங்கள் பாடு தான் சக்க போடுதான் படா ஜோரு தான்

அஞ்சலி அஞ்சலி அஞ்சலி - anjali anjali anjali

அஞ்சலி அஞ்சலி அஞ்சலி சின்ன கண்மணி கண்மணி கண்மணி
அஞ்சலி அஞ்சலி அஞ்சலி மின்னும் மின்மினி மின்மினி மின்மினி
அம்மம்மா பிள்ளைக்கனி அங்கம்தான் தங்கக்கனி 
பொன்மணி சின்ன சின்ன கண்மணி மின்ன மின்ன 
கொஞ்சிட கொஞ்சிட ஒரு கண்மேனி 
புன்னகை சிந்திட ஒரு பொன்மேனி 
முத்தமும் தந்திடும் சிறு பூமேனி 
கண்படும் கண்படும் இந்த பொன்மேனி

ஆகாயம் பூமி எல்லாம் இறைவன் உண்டாக்கி வைத்து 
ஆசை தான் தீராமலே உன்னை தந்தான் அம்மா 
கண்ணே உன்மேல் மேகம் தான் பன்னீர் தூவி நீராட்டும் 
துள்ளி தாவும் மான் குட்டி சொல்லி சொல்லி தாலாட்டும் 
நடக்கும் நடையில் ஒரு பல்லாக்கு சிரிக்கும் சிரிப்பும்  ஒரு மத்தாப்பு 
உனது அழகுக்கென்ன ராஜாத்தி உலகம் நடந்து வரும் கைதட்டி 
வராமல் வந்த தேவதை உலாவும் இந்த வெள்ளி தாரகை 

பூப்போல கண்ணாலே தான் பேசும் சிங்காரமேனி 
அன்னம் போல் நம்மோடு தான் ஆடு எப்போதும் நீ 
வானம் வாழும் ஏஞ்சல் தான் வண்ணப் பாப்பா அஞ்சலி தான் 
அம்மா நெஞ்சில் ஊஞ்சல் தான் ஆடிப்பார்க்கும் அஞ்சலி 
நடந்து நடந்து வரும் பூஞ்செண்டு பறந்து பறந்து வரும் பொன்வண்டு 
எடுக்க எடுக்க இரு கைகொண்டு இனிக்க இனிக்க வரும் கற்கண்டு 
நிலாவை போல ஆடிவா 
நிலாமல் கூட நீயும் ஓடி வா

அந்தி மழை பொழிகிறது - andhi mazhai pozhigirathu

அந்தி மழை பொழிகிறது ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது 
இந்திரன் தோட்டத்து முந்திரியே மன்மத நாட்டுக்கு மந்திரியே 

தேனில் வண்டு மூழ்கும் போது பாவம் என்று வந்தாள் மாது 
நெஞ்சுக்குள் தீயை வைத்து மோகம் என்றாய் 
தண்ணீரில் மூழ்கிக்கொண்டே தாகம் என்றாய் 
தனிமையிலே வெறுமையிலே எத்தனை நாளடி இளமையிலே
கேட்டன இரவுகள் சுட்டன கனவுகள் இமைகளும் சுமையடி இளமையிலே 

தேகம் யாவும் தீயின் தாகம் தாகம் தீர நீதான் மேகம்
கண்ணுக்குள் முள்ளை வைத்து யார் தைத்தது 
தண்ணீரில் நிற்கும் போதே வேர்க்கின்றது 
நெஞ்சு பொறு கொஞ்சம இரு தாவணி விசிறிகள் வீசுகிறேன் 
மன்மத அம்புகள் தைத்த இடங்களில் சந்தனமாய் எனை பூசுகிறேன்
 
அந்தி மழை பொழிகிறது ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது 
சிப்பியில் தப்பிய நித்திலமே ரகசிய ராத்திரி புத்தகமே