Monday, July 13, 2015

பூ மாலை வாங்கி வந்தான் - poomaalai vaangi vanthaan

பூ மாலை வாங்கி வந்தான்  - தினம் தினம் 
பூக்கள் இல்லையே
செவியில்லை இங்கொரு இசை எதற்கு 
விழியில்லை இங்கொரு விளக்கெதற்கு 
நாளும் நாளும் அவள் நினைவில் இவன் அழுது 

கையில் கிண்ணம் பிடித்து விட்டான் 
இனிக்கின்ற விஷத்துக்குள் விழுந்துவிட்டான் 
ராகம் தாளம் மறந்துவிட்டான் 
ரசிகரின் கடிதத்தை கிழித்துவிட்டான் 
கடற்கரை எங்கும் மணல்வெளியில் 
காதலி காலடி தேடினான் 
மோகனம் பாடும் வேளையிலும் சிந்துவில் ராகம் பாடினான் 
விதியெனும் ஊஞ்சலில் ஆடினான் 
போதையினால் புகழ் இழந்தான் 
மேடையில் அணிந்தது வீதியில் விழுந்திட 

நேற்று சபதங்கள் எடுத்துவிட்டான் 
குடிக்கின்ற கோப்பையை உடைத்துவிட்டான் 
மீண்டும் அவள் முகம் நினைத்து விட்டான் 
சபதத்தை அவன் இன்று உடைத்துவிட்டான் 
இசைக்கொரு குயிலென்று பேரெடுத்தான் 
இருமலைத்தான் இன்று சுரம் பிரித்தான் 
மனிதர்கள் இருப்பதை மறந்துவிட்டான் 
மானத்தின் மானத்தை வாங்கிவிட்டான் 
போதையின் பாதையில் போகின்றான் 
தன் முகமே தான் மறந்தான் 
சூடவும் தோளில்லை ஆளில்லை 

Saturday, July 11, 2015

பருவமே புதிய பாடல் - paruvamae pudhiya paadal

பருவமே புதிய பாடல் பாடு 
இளமையின் பூந்தென்றல் ராகம் 

பூந்தோட்டத்தில் ஹோய் காதல் கண்ணம்மா 

சிரிக்கிறான் ஹோ ஹோ ஹோ ரசிக்கிறான் ராஜா 
சிவக்கிறாள் ஹோ ஹோ ஹோ துடிக்கிறாள் ராணி 
தீபங்கள் போலாடும் பார்வை சேரும் 

தேனாடும் முல்லை நெஞ்சில் என்னவோ 

அழைக்கிறான் ஹோ ஹோ ஹோ நடிக்கிறான் தோழன் 
அணைக்கிறான் ஹோ ஹோ ஹோ தவிக்கிறாள் தோழி 
காலங்கள் பொன்னாக மாறும் நேரம் 

Wednesday, July 8, 2015

மயக்கம் எனது தாயகம் - mayakkam enathu thaayagam

மயக்கம் எனது தாயகம் 
மௌனம் எனது தாய்மொழி 
கலக்கம் எனது காவியம் - நான் 
கண்ணீர் வரைந்த ஓவியம்

பகலில் தோன்றும் நிலவு கண் பார்வைக்கு மறந்த அழகு 
திரை மூடிய சிலை நான் துன்ப சிறையில் மலர்ந்த மலர் நான் 

நானே எனக்கு பகையானேன் என் நாடகத்தில் நான் திரையானேன் 
தேனே உனக்கு புரியாது அந்த தெய்வம் வராமல் விளங்காது 

விதியும் மதியும் வேறம்மா அதன் விளக்கம் நான் தான் பாரம்மா 

மதியில் வந்தவள் நீயம்மா என் வழி மறைத்தாள் விதியம்மா


மாலைபொழுதின் மயக்கத்திலே - maalaipozhuthin mayakkathile

மாலைபொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி 
மனதில் இருந்தும் வார்த்தைகள் இல்லை காரணம் ஏன் தோழி 
காரணம் ஏன் தோழி 

இன்பம் சில நாள் துன்பம் சில நாள் என்றவர் யார் தோழி 
இன்பம் கனவில் துன்பம் எதிரில் காண்பது ஏன் தோழி 

மணமுடித்தவர் போல் அருகினிலே ஓர் வடிவுகண்டேன் தோழி 
மங்கை என் கையில் குங்குமம் தந்தார் மாலையிட்டார் தோழி 
வழி மறந்தேனோ வந்தவர் நெஞ்சில் சாய்ந்துவிட்டேன் தோழி - அவர் 
மறவேன் மறவேன் என்றார் உடனே மறந்து விட்டார் தோழி 
பறந்து விட்டார் தோழி 

கனவில் வந்தவர் யாரென கேட்டேன் கணவர் என்றார் தோழி 
கணவர் என்றால் அவர் கனவு முடிந்ததும் பிரிந்தது ஏன் தோழி 
இளமையெல்லாம் வெறும் கனவு மயம் இதில் மறைந்தது சில காலம் 
தெளிவும் அறியாது முடிவும் தெரியாது மயங்குது எதிர் காலம் 
மயங்குது எதிர் காலம்

சின்னஞ் சிறிய வண்ணப் பறவை - chinna chiriya vanna paravai

சின்னஞ் சிறிய வண்ணப் பறவை என்னத்தை சொல்லுதம்மா - அது 
இன்னிசையோடு தன்னை மறந்து சொன்னதை சொல்லுதம்மா 

உலகம் தெரியவில்லை உலகம் தெரியவில்லை
ஒவ்வொரு நாளும் மாறுகின்ற உள்ளம் புரியவில்லை 
உலகம் தெரியவில்லை 
ஒவ்வொரு நாளும் மாறுகின்ற உள்ளம் புரியவில்லை
உலகம் தெரியவில்லை உலகம் தெரியவில்லை 
ஒன்றும் புரியவில்லை ஒன்றும் புரியவில்லை 

மனதினிலே தோன்றும் மயக்கங்கள் கோடி - அந்த 
மயக்கத்திலே ஆடுதே ஊஞ்சலாடி 

வாசல் ஒன்றிருக்கும் 
ஆசைகொண்ட நெஞ்சம் தனில் வழி இரண்டிருக்கும் 
கண்களிலே தோன்றும் காட்சிகள் கோடி - அந்த 
கவர்ச்சியிலே பாடுதே ஊஞ்சலாடி


ஒரு நாள் போதுமா - Oru naal podhuma

ஒரு நாள் போதுமா இன்றொரு நாள் போதுமா
நான் பாட இன்றொரு நாள் போதுமா
நாதமா கீதமா அதை நான் பாட இன்றொரு நாள் போதுமா
புது நாதமா சங்கீதமா அதை நான் பாட இன்றொரு நாள் போதுமா 

ராகமா சுக ராகமா
கானமா தேவ கானமா
என் கலைகிந்த திரு நாடு சமமாகுமா
என் கலைகிந்த திரு நாடு சமமாகுமா
நாதமா கீதமா அதை நான் பாட இன்றொரு நாள் போதுமா

குழலென்றும் யாழென்றும் சிலர் கூறுவார்
என் குரல் கேட்ட பின்னாலே அவர் மாறுவார்
அழியாத கலையென்று எனை பாடுவார்
எனை அறியாமல் எதிர்ப்போர்கள் எழுந்தோடுவார்

இசை கேட்க எழுந்தோடி வருவாரன்றோ 
எழுந்தோடி வருவாரன்றோ...எழுந்தோடி...தோடி...இசை கேட்க எழுந்தோடி வருவாரன்றோ 
எனக்கிணையாக தர்பாரில் எவரும் உண்டோ
தர்பாரில் எவரும் உண்டோ....தர்பாரில் எவரும் உண்டோ....
எனக்கிணையாக  தர்பாரில் எவரும் உண்டோ 
கலையாத மோகன சுவை நானன்றோ மோகன சுவை நானன்றோ 
மோகனம்....
கலையாத மோகன சுவை நானன்றோ
கானடா ஆ .....என் பாட்டு தேனடா 
இசை தெய்வம் நானடா  

ஏதோ நினைவுகள் - aedho ninaivugal

ஏதோ நினைவுகள் கனவுகள் மனதிலே மலருதே 
காவேரி ஊற்றாகவே காற்றோடு காற்றாகவே 
தினம் காண்பது தான் 

மார்பினில் நானும் மாறாமல் சேரும் காலம் தான் வேண்டும் 
வான் வெளி எங்கும் என் காதல் வாழும் நாள் வேண்டும் 
தேவைகள் எல்லாம் தீராத நேரம் தேவன் நீ வேண்டும் 
தேடும் நான் வேண்டும் 

நாடிய சொந்தம் நான் காணும் பந்தம் இன்பம் பேரின்பம் 
நாளொரு வண்ணம் நான் காணும் வண்ணம் ஆஹா ஆனந்தம் 
காற்றினில் செல்லும் என் காதல் எண்ணம் ஏங்கும் எந்நாளும் 
ஏக்கம் உள்ளாடும்