Friday, July 18, 2014

தென்றல் தான் திங்கள் தான் - Thendral thaan thingal thaan

தென்றல் தான் திங்கள் தான் நாளும் சிந்தும் 
உன்னில் தான் என்னில் தான்  காதல் சந்தம் 
ஆடும் காற்று  நெஞ்சில் தாளம் போட ஆசை ஊற்று காதில் கானம் பாட 
நெஞ்சோடு தான் வா வா வா கூட 

காவேரி ஆற்றின் மீனிங்கே காதோடு மோதும் ஆனந்தம்
தீராத காதல் தேனிங்கே பாட்டோடு பாட்டாய் ஆரம்பம் 
பாராமலே போராடினேன் தாளாத மோகம் ஏற 
தூங்காமலே நான் வாடினேன் சேராத தோள் தான் சேர 
தாவிடும் என் நெஞ்சத்தின் சந்தங்கள் பாடிடும் உன்னை 
தேடிடும் உன் நெஞ்சத்தின் மஞ்சத்தில்  பாய்ந்திடும் என் எண்ணங்கள் 
நித்தம் நீ தித்தித்தாய் பக்கம் தான் வா வா வா கூட  (தென்றல் தான் திங்கள்...)

பூ மீது மோதும் தென்றல் தான் பூமேனி சேர்ந்தால் தாங்காது 
பூவாடை மூடும் ஜாலத்தால் பூபாளம் தானாய் தோன்றாது 
நூலாடையின் மேலாடவும் தேகம் தான் தீயாய் மாறும் 
தேனோடையில் நீராடவும் மோகந்தான் மேலும் ஏறும் 
தேடிடும் என் ராஜாவின் ரோஜாப்பூ சேர்ந்திடும் உன்னை 
கேளடி என் ராஜாங்கம் நீதானே சேரடி என் மன்றத்தில் 
நித்தம் நீ தித்தித்தாய் பக்கம் தான் வா வா வா கூட  (தென்றல் தான் திங்கள்...)


சங்கீத ஸ்வரங்கள் - Sangeetha swarangal

சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா இன்னும் இருக்கா என்னவோ மயக்கம் 
என் வீட்டில் இரவு அங்கே இரவா இல்ல பகலா எனக்கும் மயக்கம் 
நெஞ்சில் என்னவோ நெனச்சேன் 
நானும்தான் நெனச்சேன் 
ஞாபகம் வரல
யோசிச்சா தெரியும் 
யோசனை வரல 
தூங்கினா விளங்கும் 
தூக்கந்தான் வரல 
பாடுறேன் மெதுவா உறங்கு 

எந்தெந்த இடங்கள் தொட்டால் ஸ்வரங்கள் துள்ளும் சுகங்கள் கொஞ்சம் நீ சொல்லித்தா 

சொர்க்கத்தில் இருந்து யாரோ எழுதும் காதல் கடிதம்  இன்று தான் வந்தது 
சொர்க்கம் மண்ணிலே பிறக்க 
நாயகன் ஒருவன் நாயகி ஒருத்தி 
தேன்மழை பொழிய பூவுடல் நனைய 
காமனின் சபையில் காதலின் சுவையில் பாடிடும் கவிதை சுகந்தான் 



நேத்து ஒருத்தர ஒருத்தரு - Naethu oruthara orutharu


நேத்து ஒருத்தர ஒருத்தரு பாத்தோம்

பாத்து ஒருத்தர ஒருத்தரு மறந்தோம்
காத்து குளிர் காத்து
கூத்து என்ன கூத்து
சிறு நாத்துல நடக்குற காத்துல பூத்தது
பாட்டுத்தான் புது பாட்டுத்தான்
தனக்குத்தக்க கூட்டுதான்
இணைஞ்சதொரு கூட்டுதான்

ஆத்தங்கரையோரம் பூத்திருக்கும் அழகுப் பூவாசம்
பாத்து மனசோரம் பசிச்சிருக்கும் பலநாள் உன் நேசம்
அடி ஆத்தி ஆத்திமரம் அரும்பு விட்டு ஆரம் பூத்த மரம்
மாசி மாத்தி தரும் மனசு வெச்சு மாலை போட வரும்
பூத்தது பூத்தது பார்வை போர்த்துது போர்த்துது போர்வை
பாத்தது தோளில தாவ கோர்த்தது கோர்த்தது பூவ
போட்டா கணை போட்டா 
கேட்டா பதில் கேட்டா 
வழி காட்டுது...பலசுகம் கூட்டுது...வருகிற… 


பாட்டுத்தான்ஹே ஹே ஹே...புதுப்பாட்டுத்தான் தனக்குத்தக்க...கூட்டுத்தான்... ஹே ஹே ஹே... 
இணைஞ்சதொரு...கூட்டுத்தான் (நேத்து ஒருத்தர...)

அழகா சுதி கேட்டு நீ நடக்கும் நடையில் ஜதி கேட்டு 
படிப்பேன் பல பாட்டு தினம் நடக்கும் காதல் விளையாட்டு 
இந்த மானே மரகதமே ஒன்ன நெனச்சு நானே தினம் தினமே 
பாடும் ஒரு வரமே எனக்களிக்க வேணும் புது ஸ்வரமே 
பாட்டொரு பாத்தொரு மாதிரி ஆச்சு ராத்திரி தூக்கமும் போச்சு 
காத்துல கரையுது மூச்சு காவிய மாகிடலாச்சு 
பாத்து வழி பாத்து 
சேத்து ஒன்ன சேத்து 
அரங்கேத்துது மனசுல பூத்தது பூத்தது 

பாட்டுத்தான்ஹே ஹே ஹே...புதுப்பாட்டுத்தான் 
தனக்குத்தக்க...கூட்டுத்தான்... ஹே ஹே ஹே... 

இணைஞ்சதொரு...கூட்டுத்தான் (நேத்து ஒருத்தர...)

உன் பார்வையில் ஓராயிரம் - Un paarvayil oraayiram

உன் பார்வையில் ஓராயிரம்  கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே
நிதமும் உன்னை நினைக்கிறேன் நினைவினாலே அணைக்கிறேன்


அசைத்து இசைத்தது வளைக்கரம் தான் 
இசைந்து இசைத்தது புது ஸ்வரம் தான் 
சிரித்த சிரிப்பொலி சிலம்பொலி தான்
கழுத்தில் இருப்பது வலம்புரிதான் 

இருக்கும் வரைக்கும் எடுத்துக் கொடுக்கும் 
மனதை மயிலிடம் இழந்தேனே 
மயங்கி தினம் தினம் விழுந்தேனே 
மறந்து இருந்து பறந்து தினம் மகிழ (உன் பார்வையில்...)

அணைத்து நனைந்தது தலையணை தான்
அடுத்த அடி என்ன எடுப்பது நான்
படுக்கை விரித்தது உனக்கெனத் தான்
இடுப்பை வளைத்துனை அணைத்திடத்தான்

நினைக்க மறந்தால் தனித்து பறந்தேன் 
மறைத்த முகத்திரை திறப்பாயோ 
திறந்து அகச்சிறை இருப்பாயோ 
இருந்து விருந்து  மனம் இணைய (உன் பார்வையில்...)

Thursday, July 10, 2014

மானின் இரு கண்கள் - Maanin iru kangal

மானின் இரு கண்கள் கொண்ட மானே மானே 
தேனின் சுவை கன்னம் கொண்ட தேனே தேனே 
உள்ளதெல்லாம் அள்ளித்தரவா வா வா 
வஞ்சி என்றும் வள்ளலல்லவா காதல் 
மல்லிகை வண்டாட்டம் தான் 
போடு நீ கொண்டாட்டம் தான் 

முக்குளித்து முத்தெடுத்து சொக்கத்தங்க நூலெடுத்து 
வக்கணையாய் நான் தொடுத்து 
வண்ணமொழி பெண்ணுக்கென காத்திருக்க 

வைகுழலில் பூ முடித்து மங்கலமாய் பொட்டு வைத்து 
மெய்யணைக்க கையணைக்க 
மன்னவனின் நல்வரவை பார்த்திருக்க 

இன்னும் ஒரு ஏக்கம் என்ன என்னைத்தொடக் கூடாதா
உன்னைத்தொட தேனும் பாலும் வெள்ளம் என ஓடாதா 
முன்னழகும் பின்னழகும் ஆட 
இளமை ஒரு முத்திரையை வைப்பதற்கும் வாட 
மயக்கும் இள -- (மானின் இரு)

ஊசியிலை காடிருக்க உச்சிமலை மேடிருக்க 
பச்சக்கிளி கூடிருக்க பக்கம் வர வெட்கம் என்ன மாமனுக்கு 
புல்வெளியில் மெத்தையிட்டு மெத்தையிலே உன்னையிட்டு 
சத்தமிட்டு முத்தமிட உத்தரவு இட்டுவிடு நீயெனக்கு 
அந்திபகல் மோகம் வந்து அங்கும் இங்கும் போராட 
எந்தப்புரம் காணும் போதும் அந்தப்புரம் போலாக 
செங்கரும்பு சாரெடுக்கத்தானே உனக்கு ஒரு சம்மதத்தை தந்துவிட்டேன் நானே 
மயக்கும் இள -- (மானின் இரு)

Tuesday, July 8, 2014

கண்ணாலே மிய்யா மிய்யா - Kannale miya miya

கண்ணாலே மிய்யா மிய்யா 
கிள்ளாதே கிய்யா கிய்யா 
உள்ளே ஓர் உய்யா உய்யா 
நீ இல்லாமையா நீலயாமையா 

காதலால் சொக்கி பையா 
இனிக்குமே  உந்தன் கையா 
இதழின் ஓரம் தேவையா 

பாதி கண்கள் மூடும் 
மீதிக் கண்கள் தேடும் 
மூடிக்கொண்டும் உன்னை பார்க்கும் அல்லோ 
பார்வை தப்பும் நேரம் 
நாணம் கப்பல் ஏறும் 
கூந்தல் கூட கொஞ்சம் கூசுமல்லோ 
முதல் முதல் ஏழுதும் 
தேர்வின் பயம் தான் 
உயிரினில் நுழையும் நேரம் இதுதான் 
ஹே கொஞ்சம் சும்மா இரு 
பக்கம் வந்தால் வம்பா இது

இமை ஒட்டிக்கொள்ளும் 
இதழ் திட்டித்தள்ளும் 
நிழல் கட்டிக்கொள்ளும் 
ஒரே நிழல் மிஞ்சும் -- (கண்ணாலே மிய்யா)

தீயை தின்னும் நேரம் 
தேகம் எங்கும் ஈரம் 
மோகம் கொண்ட முத்தம் காயாதல்லோ 
காமம் கட்டில் ஆடும் 
மூச்சின் வெப்பம் கூடும் 
ஆடை பற்றிக்கொள்ள கூடுமல்லோ 
தலையணை முழுதும் ஓ கூந்தல் அலைதான் 
இருபது விரலும் ஹோய் தீயின் கிளைதான் 
ஹேய் என்னை தீண்டாதிரு 
பக்கம் வந்தால் தள்ளாதிரு 

கண்கள் ரெண்டும் பள்ளம் 
வேர்வை கொட்டி வெள்ளம் 
கட்டில் வெட்கம் செல்லும் 
ஒரே நிழல் மிஞ்சும்  -- (கண்ணாலே மிய்யா)

Thursday, November 7, 2013

ஓ ப்ரியா ப்ரியா - O priya priya

ஓ ப்ரியா ப்ரியா என் ப்ரியா ப்ரியா
ஏழை காதல் வாழுமோ இருளும் ஒளியும் சேருமோ
நீயோர் ஓரம் நான் ஓர் ஓரம்
கானல் நீரால் தாகம் தீராது

ஓ ப்ரியா ப்ரியா உன் ப்ரியா ப்ரியா
இணைந்திடாது போவதோ வானம்  ஆவதோ
காலம் சிறிது காதல் மனது
தேவன் நீதான் போனால் விடாது

தேடும் கண்களே தேம்பும் நெஞ்சமே
வீடும் பொய்யடி வாழ்வும் பொய்யடி

அன்பு கொண்ட கண்களும் ஆசை கொண்ட நெஞ்சமும்
ஆணை இட்டு மாறுமோ பெண்மை தாங்குமோ
ராஜை மங்கை கண்களே என்றும் என்னை மொய்ப்பதோ
வாடும் ஏழை இங்கு ஓர் பாவி அல்லவோ
எதனாலும்  மறையாது பிரேமையும்
எரித்தாலும் மரித்தாலும் விலகாத பாசமோ
கன்னி மானும் உன்னுடன் கலந்ததென்ன பாவமோ
காதல் என்ன காற்றிலே குலைந்து போகும் மேகமோ
அம்மாடி நான் ஏங்கவோ ஓ நீ வா வா

ஓ ப்ரியா ப்ரியா என் ப்ரியா ப்ரியா
ஓ ப்ரியா ப்ரியா உன் ப்ரியா ப்ரியா

காளிதாசன் ஏடுகள் கண்ணன் ராசா லீலைகள்
பருவ மோகம் தந்தது பாவம் அல்லவே
ஷாஜகனின் காதலி தாஜ்மஹால் பூங்கிளி
பாசம் வைத்த பாவம் தான் சாபம் வந்தது
இறந்தாலே இரவாது விளைகின்ற பிரேமையே
அடி நீயே வழியாக வருகின்ற பெண்மையே
விழியில் பூக்கும் நேசமாய் புனிதமான பந்தமாய்
பேசும் இந்த பாசமே இன்று வெற்றி கொள்ளுமே
இளம் கன்னி உன்னுடன் கூட வா வா

ஏக்கம் என்ன பைங்கிளி என்னை வந்து சேரடி
நெஞ்சிரண்டு நாளும் பாட காவல் தாண்டி பூவை இங்காட
காதல் கீர்த்தனம் காணும் மங்களம்
பிரேமை நாடகம் பெண்மை ஆடிடும்