Tuesday, March 14, 2023

thangamagan indru - தங்கமகன் இன்று

thangamagan indru singa nadai pottu arugil arugil vandhaan
rendu puram patri eriyum mezhugaaga mangai urugi nindraal
kattum aadai en kaadhalan kandadhum nazhuviyadhe 
vetka thaazhpaal adhu vendhanai kandathum vilagiyadhe
raththa thaamarai mutham kaetkudhu vaa en vaazhve vaa


chinna kalaivaani nee vanna silaimaeni
adhu manjam thanil maaram thalai vaikum inbathalagaani
aasai thalaivan nee naan adimai magaraani
mangai ival angam engum poosa needhaan marudhaani
thirakkaadha pookkal vedithaaga vendum
thenpaandi thendral thiranthaaga vendum
enna sammadhama innum thaamadhama


thookkam vandhaale manam thalaiyanai thedaadhu 
thaane vandhu kaadhal kollum ullam jaadhagam paarkaadhu
megam mazhai thanthaal thuli mele pogaadhu
pennin manavaanil vizhavendum vidhithaan maaradhu
en perin pinne nee sera vaendum kadal konda gankai niram maara vendum
enai maatrividu idhazh ootri kodu


thangamagan indru singa nadai pottu arugil arugil vandhaan
rendu puram patri eriyum mezhugaaga mangai urugi nindraal
kattum aadai un kaadhalan kandadhum vilagiyadho
muththam enbadhan artham pazhagida vaa en vaazhve vaa

தங்கமகன் இன்று சிங்க நடை போட்டு அருகில் அருகில் வந்தான் 
ரெண்டு புறம் பற்றி எரியும் மெழுகாக மங்கை உருகி நின்றாள் 
கட்டும் ஆடை என் காதலன் கண்டதும் நழுவியதே 
வெட்கத் தாழ்ப்பாள் அது வேந்தனை கண்டதும் விலகியதே   
ரத்தத் தாமரை முத்தம் கேட்குது வா என் வாழ்வே வா 


சின்ன கலைவாணி நீ வண்ண சிலைமேனி 
அது மஞ்சம் தனில் மாறன் தலை வைக்கும் இன்ப தலைகாணி 
ஆசை தலைவன் நீ நான் அடிமை மகாராணி 
மங்கை இவள் அங்கம் எங்கும் பூச நீ தான் மருதாணி 
திறக்காத பூக்கள் வெடித்தாக வேண்டும் 
தென்பாண்டி தென்றல் திறந்தாக வேண்டும் 
என்ன சம்மதமா இன்னும் தாமதமா  


தூக்கம் வந்தாலே மனம் தலையணை தேடாது 
தானே வந்து காதல் கொள்ளும் உள்ளம் ஜாதகம் பார்க்காது 
மேகம் மழை தந்தால் துளி மேலே போகாது 
பெண்ணின் மனவானில் விழவேண்டும் விதிதான் மாறாது 
என் பேரின் பின்னே நீ சேர வேண்டும் 
கடல் கொண்ட கங்கை நிறம் மாற வேண்டும் 
என்னை மாற்றிவிடு இதழ் ஊற்றி கொடு 


தங்கமகன் இன்று சிங்க நடை போட்டு அருகில் அருகில் வந்தான் 
ரெண்டு புறம் பற்றி எரியும் மெழுகாக மங்கை உருகி நின்றாள் 
கட்டும் ஆடை உன் காதலன் கண்டதும் நழுவியதோ 
வெட்கத் தாழ்ப்பாள் அது வேந்தனை கண்டதும் விலகியதோ 
முத்தம் என்பதன் அர்த்தம் பழகிட வா என் வாழ்வே வா 


Wednesday, March 8, 2023

anaarkali anarkali - அனார்கலி அனார்கலி

anarkali anarkali aagayam nee bologam nee
ulagathile migapperum poovum neeyadi
nadhigalile chinnanchiru nadhiyum neeyadi
santhithaenadi un kankalaal swasithaenadi un paarvaiyaal

anarkali anarkali aagayam nee boologam nee
sirippum azhugaiyum serum pulliyil enai tholaithen
isaiyum kavidhaiyum serum pulliyil kandupidithen
kadal kaatru nee naan paaymaram nadhi kaatru nee naan thaavaram

iyanthira manidhanaipol unnaiyum seyvenae
iru vizhi paarvaigalaal unnaiyum asaithaenae
azhagukku ellam thimir adhigam azhagiyin thimiril rusi adhigam 
adhai indru naanae unnidam kanden
kavinganukaelaam kurumbadhigam kaviganin kurumbil suvai adhigam 
adhai indru naane unnidam kanden
nadai nadanthu pogaiyil nee ilakkkaname
naanam kondu pogaiyil nee ilakkiyame

narumanam enbatharku mugavari pookkal dhaane
en manam enbatharku mugavari nee dhaane
ennidam thondrum kavidhaikelaam muthalvari thantha mugavari nee
iruthayam sollum mugavari needhaan
iravugal thondrum kanavukelaam iruppidam thantha mugavari nee
ennidam serum mugavari needhaan
mazhaiththukku megamae mudhai mugavari
un idhazhil mouname uyir mugavariye

அனார்கலி அனார்கலி ஆகாயம் நீ பூலோகம் நீ
உலகத்திலே மிகப்பெரும் பூவும் நீயடி
நதிகளிலே சின்னஞ்சிறு நதியும் நீயடி
சந்திதேனடி உன் கண்களால் ஸ்வாசித்தேனடி உன் பார்வையால்

அனார்கலி அனார்கலி ஆகாயம் நீ பூலோகம் நீ
சிரிப்பும் அழுகையும் சேரும் புள்ளியில் என்னை தொலைத்தேன்
இசையும் கவிதையும் சேரும் புள்ளியில் கண்டுபிடித்தேன்
கடல் காற்று நீ நான் பாய்மரம் நதி காற்று நீ நான் தாவரம்

இயந்திர மனிதனை போல் உன்னையும் செய்வேனே
இரு விழி பார்வைகளால் உன்னையும் அசைத்தேனே
அழகுக்கு எல்லாம் திமிர் அதிகம் அழகியின் திமிரில் ருசி அதிகம்
அதை இன்று நானே உன்னிடம் கண்டேன்
கவிஞனுக்கெல்லாம் குறும்பதிகம் கவிஞனின் குறும்பில் சுவை  அதிகம்
அதை இன்று நானே உன்னிடம் கண்டேன்
நடை நடந்து போகையில் நீ இலக்கணமே
நாணம் கொண்டு பார்க்கையில் நீ இலக்கியமே

நறுமணம் என்பதற்கு முகவரி பூக்கள் தானே
என் மனம் என்பதற்கு முகவரி நீதானே
என்னிடம் தோன்றும் கவிதைக் எல்லாம் முதல்வரி தந்த முகவரி நீ
இருதயம் சொல்லும் முகவரி நீதான்
இரவுகள் தோன்றும் கனவுக்கெல்லாம் இருப்பிடம் தந்த முகவரி நீ
என்னிடம் சேரும் முகவரி நீதான்
மழைத்துளிக்கு மேகமே முதல் முகவரி
உன் இதழில் மௌனமே உயிர் முகவரியோ


Oru naalum unai maravaatha - ஒரு நாளும் உனை மறவாத

kankana kanavena kinkini manigalum olikka olikka
engengilum mangalam mangalam enum olu muzhanga muzhanga oru suyamvaram nadakindradhe
idhu sugam tharum suyamvaramae

oru naalum unai maravaadha inidhaana varam vaendum
uravaalum udal uyiraalum piriyadha varam vendum
vizhiyodu imai pole vilagaadha nilai vaendum
enai aalum ejamaane enai aalum ejamaane

suttu viral nee kaatu sonnapadi aaduven
unnadimai naan endru kayezhuthu poduven
unnuthiram pole naan ponnudalil ooduven
unnudalil nan odi ullazhagai theduven
thogai kondu nindraadum sengarumbu thegam
munthu varum thaen vaangi pandhi vaikum naeram 
ambugal pattu narambugal suttu vambugal enna varappugal vittu

kattilidum sootodu thottil kattu anname
mullaikkodi tharum andha pillaikkani vaendume
unnaiyoru saey polae en madiyil thaangavaa
ennudaiya thaalaatil kanmayangi thoongavaa
aariraaro nee paada aasai undu maane 
aaru aezhu kaetaalum petredupen naanae
muthinam varum muththu thinam endru siththiram varum visithiram endru

கங்கணகனவென கிண்கிணி மணிகளும் ஒலிக்க ஒலிக்க
எங்கெங்கிலும் மங்களம் மங்களம் எனும் ஒலி முழங்க முழங்க ஒரு சுயம்வரம் நடக்கின்றதே
இது சுகம் தரும் சுயம்வரமே

ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்
உறவாலும் உடல் உயிராலும் பிரியாத வரம் வேண்டும்
விழியோடு இமை போலே விலகாத நிலை வேண்டும்
எனை ஆளும் எஜமானே எனை ஆளும் எஜமானே

சுட்டு விரல் நீ காட்டு சொன்னபடி ஆடுவேன்
உன்னடிமை நான் என்று கையெழுத்து போடுவேன்
உன்னுதிரம் போலே நான் பொன்னுடலில் ஓடுவேன்
உன்னுடலில் நான் ஓடி உள்ளழகை தேடுவேன்
தோகை கொண்டு நின்றாடும் செங்கரும்பு தேகம்
முந்து வரும் தேன் வாங்கி பந்தி வைக்கும் நேரம்
அம்புகள் பட்டு நரம்புகள் சுட்டு வம்புகள் என்ன வரப்புகள் விட்டு

கட்டிலிடும் சூட்டோடு தொட்டில் கட்டு அன்னமே
முல்லைக்கொடி தரும் அந்த பிள்ளைக்கனி வேண்டுமே
உன்னையொரு சேய் போலே என் மடியில் தாங்கவா
என்னுடைய தாலாட்டில் கண்மயங்கி தூங்கவா
ஆரிராரோ நீ பாட ஆசை உண்டு மானே
ஆறு ஏழு கேட்டாலும் பெற்றெடுப்பேன் நானே
முத்தினம் வரும் முத்து தினம் என்று சித்திரம் வரும் விசித்திரம் என்று