Friday, September 26, 2014

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் - Ninaippathaelaam nadanthuvittaal

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை 
நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை 
முடிந்த கதை தொடர்வதில்லை இறைவன் ஏட்டினிலே
தொடர்ந்த கதை முடிவதில்லை மனிதன் வீட்டினிலே 

ஆயிரம் வாசல் இதயம் அதில் ஆயிரம் எண்ணங்கள் உதயம் 
யாரோ வருவார் யாரோ இருப்பார் வருவதும் போவதும் தெரியாது 
ஒருவர்  மட்டும் குடியிருந்தால் துன்பம் ஏதுமில்லை 
ஒன்றிருக்க ஒன்று  வந்தால் என்றும் அமைதியில்லை (நினைப்பதெல்லாம்...)

எங்கே வாழ்க்கை தொடங்கும் அது எங்கே எவ்விதம் முடியும் 
இதுதான் பாதை இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது 
பாதையெல்லாம் மாறிவரும் பயணம் முடிந்துவிடும் 
மாறுவதை புரிந்துகொண்டால் மயக்கம் தெளிந்துவிடும் (நினைப்பதெல்லாம்...)

கடவுள் ஒரு நாள் - Kadavul oru naal

கடவுள் ஒரு நாள் உலகைக் காண தனியே வந்தாராம்
கண்ணில் கண்ட மனிதனை எல்லாம் நலமா என்றாராம் 
ஒரு மனிதன் வாழ்வை இனிமையென்றான் 
ஒரு மனிதன் அதுவே கொடுமையென்றான் 
படைத்தவனோ உடனே சிரித்துவிட்டான் 

கள்ளம் இல்லா பிள்ளை உள்ளம் நான் தந்தது 
காசும் பணமும் ஆசையும் இங்கே யார் தந்தத
எல்லை இல்லா நீரும் நிலமும் நான் தந்தது
எந்தன் சொந்தம் என்னும் எண்ணம் ஏன் வந்தது 
இறைவனுக்கே இது புரியவில்லை மனிதனின் கொள்கை தெரியவில்லை
ஒரு மனிதன் வாழ்வை இனிமையென்றான் 
ஒரு மனிதன் அதுவே கொடுமையென்றான் 
படைத்தவனோ உடனே சிரித்துவிட்டான் (கடவுள் ஒரு நாள்...)


பள்ளிக்கூடம் செல்லும் வழியில் கடவுள் நின்றானாம் 
பச்சைப்பிள்ளை மழலை மொழியில் தன்னைக் கண்டானாம்
உள்ளம் எங்கும் வெள்ளம் பொங்கும் அன்பைக் கண்டானாம் 
உண்மை கண்டேன் போதும் என்று வானம் சென்றானாம்(கடவுள் ஒரு நாள்...)

காக்கை சிறகினிலே - Kaakkai siraginilae

காக்கை சிறகினிலே நந்தலாலா 
நின்றன் கரிய நிறம் தோன்றுதையே நந்தலாலா 

பார்க்கும் மரங்களெல்லாம் நந்தலாலா 
நின்றன் பச்சை நிறம் தோன்றுதையே நந்தலாலா  (காக்கை சிறகினிலே...)

கேட்கும் ஒலியிலெல்லாம் நந்தலாலா 
நின்றன் கீதம் இசைக்குதடா நந்தலாலா  (காக்கை சிறகினிலே...)

தீக்குள்விரலை வைத்தால் நந்தலாலா 
நின்னை தீண்டும் இன்பம் தேன்றுதடா நந்தலாலா (காக்கை சிறகினிலே...)

திருடிய இதயத்தை - Thirudiya idhayathai

திருடிய இதயத்தை திருப்பிக் கொடுத்துவிடு காதலா என் காதலா என் காதலா 
 வருடிய காற்றுக்கு வார்த்தை சொல்லிவிடு காதலா என் காதலா என் காதலா 

சிரிக்கிற சிரிப்பை நிறுத்தி விடு 
பார்க்கிற பார்வையை மறந்து விடு 
பேசுற பேச்சை நிறுத்தி விடு 
பெண்ணே என்னை மறந்து விடு
உயிரே மறந்து விடு உறவே மறந்து விடு
அன்பே விலகி விடு என்னை வாழ விடு (திருடிய இதயத்தை...)

கண்கள் மோதலால் இது வந்த காதலா நினைத்தேனே நான் நினைத்தேனே
ஊசித்தூரலாய் நீ பேசு காதலா தவித்தேனே  நான் தவித்தேனே
காற்றாய் மாறி காதலிக்கிறேன் கண்ணே ஒரு முறை சுவாசம் கொள் 
நானும் உன்னை சம்மதிக்கிறேன் என்றே இங்கொரு வார்த்தை சொல் 
மன்னவனே மன்னவனே உயிரில் உயிராய் கலந்தவனே (திருடிய இதயத்தை...)

நேற்று பொழுதுல நான் கண்ட கனவுல பார்த்தேனே உன்னை பார்த்தேனே
காதல் வயசுல நான் ஏதோ நெனப்புல துடித்தேனே நான் துடித்தேனே 
இதயத்தோடு இதயம் சேர்த்து ஒரு முறையாவது பூட்டிக்கொள் 
கண்களோடு கண்கள் வைத்து ஒரு முறையாவது பார்த்துக்கொள் 
காதலனே காதலனே வாழ்வே உனக்கென வாழ்கிறேனே (திருடிய இதயத்தை...)




என்ன இதுவோ என்னை - Enna idhuvo ennai

என்ன  இதுவோ என்னை சுற்றியே  புதிதாய் ஒரு வட்டம் 
கண்கள் மயங்கி கொஞ்சம் படுத்தால் கனவில் ஒரு சத்தம் 
நேற்று பார்த்தேன் நிலா முகம் தோற்று போனேன் அதே சுகம் 
ஏ தென்றல் பெண்ணே இது காதல் தானடி 
உன் கண்களோடு இனி மோதல் தானடி 

காதலே வாழ்க்கையின் வேதம் என்று ஆனதே 
கண்களால் சுவாசிக்க கற்றுத் தந்தது 
பூமியே சுழல்வதாய் பள்ளிப் பாடம்  சொன்னது 
இன்று  தான்  என் மனம் ஏற்றுக்கொண்டது 
ஓ காதலி என் தலையணை நீயென நினைத்துக்கொள்வேன்  
அடி நான் தூங்கினால் அதை தினம் தினம் மார்புடன் அணைத்துக்கொள்வேன் 
கோடை காலப் பூங்காற்றாய் எந்தன் வாழ்வில் வீசினாய் 
 
புத்தகம்  புரட்டினால் பக்கம் எங்கும் உன் முகம் 
பூமியில் வாழ்ந்ததாய் இல்லை ஞாபகம் 
கோவிலின் வாசலில் உன் சிரிப்பை தேடுவேன் 
கண்டதும் நொடியிலே பக்தனாகுவேன் 
ஓ காதலி என் நழுவிய கைக்குட்டை எடுப்பது போல் 
சாலை ஓரமாய் நீ நடப்பதை குனிந்து நான் ரசித்திடுவேன் 
உன்னைப் பார்க்கும் நாளெல்லாம் சுவாசக்காற்று தேவையா



 

Friday, September 12, 2014

நெஞ்சே நெஞ்சே நீ எங்கே - Nenje nenje nee engae

நெஞ்சே நெஞ்சே நீ எங்கே நானும் அங்கே என் வாழ்வும் அங்கே
அன்பே அன்பே  நீ எங்கே தேகம் இங்கே என் ஜீவன் எங்கே
என் நதியே என் கண் முன்னே வற்றிப் போனாய்
வான் மழையாக என்னைத் தேடி மண்ணில் வந்தாய் 
என் தாகங்கள் தீர்க்காமல் ஏன் கடலில் சேர்கிறாய்

கண்ணே என் கண்ணே நான் உன்னை காணாமல்
வானும் இம்மண்ணும் பொய்யாகக் கண்டேனே
அன்பே பேரன்பே நான் உன்னை சேராமல்
ஆவி என் ஆவி நான் அற்றுப் போனேனே
வெயில்காலம் வந்தால் தான் நீரும் தேனாகும்
பிரிவொன்று கொண்டால் தான் காதல் ருசியாகும்
உன் பார்வை படும் தூரம் என் வாழ்வின் உயிர் நீளும்
உன் மூச்சு நேரம் நேரம் என் தேகம் அனலாகும் (நெஞ்சே நெஞ்சே...)

கள்வா ஏ கள்வா  நீ காதல் செய்யாமல்
கண்ணும் என் நெஞ்சும் என் பேச்சைக் கேட்காதே
காதல் மெய் காதல் அது பட்டுப் போகாதே
காற்று நம் பூமி அதை விட்டுப் போகாதே
ஆகாயம் நிறம் மாறிப் போனால் போகட்டும்
ஆனால் நீ மனம்மாறிப் போகக்கூடாது 

ஏ மச்சத்தாமரையே என் உச்சத்தாரகையே
கடல் மண்ணாய் போனாலும் நம் காதல் மாறாது (நெஞ்சே நெஞ்சே...)

மெதுவா மெதுவா - Methuva methuva

மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு 
மலரும் மலரும் புது தாளம் போட்டு 
புதுசா புதுசா அதை காதில் கேட்டு 
புழுவாய் துடித்தாள் இந்த மின்னல் கீற்று 

உள்ளத்தை உன் கையில் அள்ளித்தந்தேனே 
நான் வாங்கும் மூச்செல்லாம் என்றும் நீதானே 
ஆத்தோரம் கொஞ்சிடும் தென்னஞ் சிட்டுத்தான் 
அங்கே வா பேசலாம் அச்சம் விட்டுத்தான்
இளஞ்சிட்டு உனைவிட்டு இனி எங்கும் போகாது 
இரு உள்ளம் புது வெள்ளம் ஆணை போட்டால் தாங்காது (மெதுவா...)

ராத்தூக்கம் ஏதம்மா கண்ணே உன்னாலே 
ராசாவே நானும் தான் கண்கள்மூடல்லே 
அன்பே உன் ஞாபகம் வாழும் என்னோடு 
ஒன்றல்ல ஆயிரம் ஜென்மம் உன்னோடு 
ஒரு சொந்தம் ஒரு பந்தம் இரு ஜீவன் ஒன்றாகும் 
இளங்கன்னி உன்னை எண்ணி உயிர் காதல் பண்பாடும் (மெதுவா...)

மேகங்கள் என்னைத் தொட்டு - Megangal ennaithottu

மேகங்கள் என்னைத் தொட்டு போனதுண்டு 
சில மின்னல்கள் என்னை உரசிப் போனதுண்டு 
தேகங்கள் ஒன்றிரண்டு கடந்ததுண்டு 
மனம் சில்லென்று சில போது சிலிர்த்ததுண்டு 

மோகனமே உன்னைப் போல என்னை யாரும் 
மூச்சு வரை கொள்ளையிட்டு போனதில்லை 
ஆகமொத்தம் என் நெஞ்சில் உன்னைப்போல 
எரி அமிலத்தை வீசியவர் எவருமில்லை  (மேகங்கள்...)

பிரிவொன்று நேரும் என்று தெரியும் பெண்ணே 
என் பிரியத்தை அதனால் குறைக்கமாட்டேன் 
எரியும் உடலென்று தெரியும் பெண்ணே 
என் இளமைக்கு தீயிட்டு எரிக்கமாட்டேன் (மேகங்கள்...)

கண்ணிமையின் சாமரங்கள் வீசும் காற்றில் 
என் காதல் மனம் துண்டுத் துண்டாய் உடைய கண்டேன்
துண்டு துண்டாய் உடைந்த மனத் துகளையெல்லாம்
அடி தூயவளே உனக்குள் தொலைத்து விட்டேன் (மேகங்கள்...)

செவ்வாயில் ஜீவராசி உண்டா என்று
அடி தினம்தோறும் விஞ்ஞானம் தேடல் கொள்ளும் 
உன் செவ்வாயில் உள்ளதடி எனது ஜீவன்
அது தெரியாமல் விஞ்ஞானம் எதனை வெல்லும் 
எவ்வாறு கண்ணிரண்டில் கலந்து போனேன் 
அடி எவ்வாறு மடியோடு தொலைந்து போனேன் 
இவ்வாறு தனிமையில் பேசிக் கொண்டே 
என் இரவினை கவிதையாய் மொழி பெயர்த்தேன் (மேகங்கள்...)

மூடி மூடி வைத்தாலும் விதைகள் எல்லாம்
மண்ணை முட்டி முட்டி முளைப்பது உயிரின் சாட்சி
ஓடி ஓடி போகாதே ஊமைப்பெண்ணே 
நான் உயிரோடு வாழ்வதற்கு காதல் சாட்சி (மேகங்கள்...)