Sunday, September 30, 2012

வராது வந்த நாயகன் - Varaadhu vantha naayagan

முதாகராத்த மோதகம் சதாவி முக்தி சாதகம் 
கலாதரா வதம் சகம் விலாசி லோக ரக்ஷகம் 
அநாயகைக்க நாயகம் விநாசிதேப்ரதைத்யகம் 
நதா சுபாஷு நாசகம் நமாமிதம் விநாயகம்
முதாகராத்த மோதகம் சதாவி முக்தி சாதகம் 

வராது வந்த நாயகன் ஒரே சிறந்த ஓர் வரன் 
தராதரம் புரிந்தவன் நிறம் தரம் நிறைந்தவன் 
வரம் தரும் உயர்ந்தவன் கரம் கரம் இணைந்தவன் 
இவன் தலைவி நாயகன் 

தொடாமலும் படாமலும் உலாவும் காதல் வாகனம் 
வராமலும் தராமலும் விடாது இந்த வாலிபம் 
உன்னோடு தான் பின்னோடு தான் வந்தாடும் இந்த மோகனம்
கையோடு தான் மெய்யோடு தான் கொஞ்சாமல் என்ன தாமதம் 
உன் பார்வை யாவும் நூதனம் பெண் பாவை நீ என் சீதனம் 
உன் வார்த்தை அன்பின் சாசனம் பெண் உள்ளம் உந்தன் ஆசனம் 
அள்ளாமலும் கிள்ளாமலும் தள்ளாடும் இந்த பூவனம்

கல்யாணமும் வைபோகமும் கொண்டாடும் நல்ல நாள் வரும் 
அந்நாளிலே பொன்னாளிலே என் மாலை உந்தன் தோள் வரும் 
சல்லாபமும் உல்லாசமும் கண் காணும் நேரம் பூவனம் 
சொல்லாமலும் கொள்ளாமலும் திண்டாடும் பாவம் பெண்மனம் 
இந்நேரம் அந்த நியாபகம் உண்டாக நீயும் காரணம் 
கண்ணார நாமும் காணலாம் செவ்வாழைப் பந்தல் தோரணம் 
என் ஆசையும் உன் ஆசையும் அந்நாளில் தானே பூரணம் 

Saturday, September 29, 2012

ராத்திரியில் பூத்திருக்கும் - Raathiriyil poothirukkum

ராத்திரியில் பூத்திருக்கும் தாமரை தான் பெண்ணோ 
ராஜ சுகம் தேடி வர தூது விடும் கண்ணோ 
சேலைச் சோலையே பருவ சுகம் தேடும் மாலையே 
பகலும் உறங்கிடும் 

வீணை எனும் மேனியிலே தந்தியினை மீட்டும் 
கைவிரலில் ஒரு வேகம் கண்ணசைவில் ஒரு பாவம் 
வானுலகே பூமியிலே வந்தது போல் காட்டும் 
ஜீவ நதி நெஞ்சினிலேஆடும் போதும் ஓடும் புதிய அனுபவம் 

மாங்கனிகள் தொட்டிலிலே தூங்குதடி அங்கே 
மன்னவனின் பசியாற மாலையிலே பரிமாற 
வாழை இல்லை நீர் தெளித்து போட்டி என் கண்ணே 
நாதஸ்வரம் ஊதும் வரை நெஞ்சம் இன்னும் பொறுமை அவசியம்  

Tuesday, September 18, 2012

பெண்கள் நெஞ்சை - Pengal nenjai

பெண்கள் நெஞ்சை கொள்ளை கொள்ளும் வெள்ளை மாதவா 
உதட்டுக்கும் உதட்டுக்கும் சண்டை போடவா 
உன்னிடத்தில் உள்ளதெல்லாம் அள்ளிக்கொள்ளவா 
உன் உடம்புக்குள் உயிர் மட்டும் விட்டுச்செல்லவா 
உன் வேரோடு மழை சிந்த வரவா உன் வெட்கத்தை குளிப்பாட்ட வரவா 
குளிப்பாட்டி அழுக்காக்கவா 

ஏய் சண்டை போடவா...ஏய் விட்டுச்செல்லவா 


மொட்டுக்கெல்லாம் தும்மல் வந்தால் மலர்ந்து விடும் 

மோகம் வந்தால் பெண்ணின் உள்ளம் திறந்து விடும் 
முட்டைக்குள்ளே மஞ்சளுக்கும் கொழுப்பிருக்கும் 
உன் முடி முதல் கால் வரை கொழுப்பிருக்கும் 
விழிகள் அளந்தால் இலக்கணம் இருக்கும் 
விரல்கள் அளந்தால் இலக்கியம் இருக்கும் 
பட்டுக் கைகளால் நீ தொட்டுக்கிடந்தால் பாறையும் இளமை சுரக்கும் 
பாலாற்றை நீராட்ட வா 
ஏய் படவா நீ தொடவா நான் தொடவா ஏய் மாதவா 

கண்ணு காத்து மூக்கு மட்டும் தொட்டுவிட்டு போ 

கற்பை மட்டும் கொஞ்ச காலம் விட்டுவிட்டு போ 
தொலைந்த என் தூக்கம் எங்கே தந்து விட்டு போ 
தலையணை சுகம் இல்லை சொல்லிவிட்டு போ 
பதினெட்டு வருடம் பழுத்த என் அழகு
பதினெட்டு நொடியில் சமர்ப்பணம் உனக்கு 
உன்னைக் கலந்தால் முந்நூறு வருஷம் நான் கொண்ட இளமை நிலைக்கும் 
மோட்சத்தில் மூப்பேதடா 
ஏய் படவா நீ தொடவா நான் தொடவா ஏய் மாதவா 


Saturday, September 15, 2012

ஒரு வெட்கம் வருதே - Oru vetkam varudhe

ஒரு வெட்கம் வருதே வருதே சிறு அச்சம் தருதே தருதே 
மனமின்று அலைபாயுதே 
இது என்ன முதலா முடிவா இனி எந்தன் உயிரும் உனதா
புது இன்பம் தாலாட்டுதே 

போகச்சொல்லி கால்கள் தள்ள நிற்கச்சொல்லி நெஞ்சம் கிள்ள 
இது முதல் அனுபவமே இனி இது தொடர்ந்திடுமே 
இது தரும் தரும் தடுமாற்றம் சுகம் 

மழை இன்று வருமா வருமா குளிர் கொஞ்சம் தருமா தருமா 
கனவென்னை களவாடுதே 
இது என்ன முதலா முடிவா இனி எந்தன் உயிரும் உனதா
புது இன்பம் தாலாட்டுதே 

கேட்டு வாங்கிக் கொள்ளும் துன்பம் கூறு போட்டு கொல்லும் இன்பம் 
பட பட படவேனவே துடி துடித்திடும் மனமே 
வர வர வர கரை தாண்டிடுமே

மேலும் சில முறை உன் குறும்பிலே நானே தோற்கிறேன் 
உன் மடியிலே என் தலையணை இருந்தால் உறங்குவேன்
ஆணின் மனதிற்குள்ளும் பெண்மை இருக்கிறதே
தூங்க வைத்திடவே நெஞ்சம் துடிக்கிறதே  
ஒரு வரி நீ சொல்ல ஒரு வரி நான் சொல்ல
எழுதிடும் காதல் காவியம் அனைவரும் கேட்கும் நாள் வரும் 

காற்றில் கலந்து நீ என் முகத்திலே ஏனோ மோதினாய் 
பூ மரங்களில் நீ இருப்பதால் என் மேல் உதிர்கிறாய்
தூது அனுப்பிடவே நேரம் எனக்கில்லையே 
நினைத்த பொழுதினிலே வரணும் எதிரினிலே 
வெயிலிலே ஊர்கோலம் இதுவரை நாம் போனோம் 
நிகழ்கிறதே கார்காலமே நனைந்திடுவோம் நாள்தோறுமே 

Friday, September 14, 2012

நீ பாதி நான் பாதி - Nee paadhi naan paadhi

நீ பாதி நான் பாதி கண்ணே 
அருகில் நீயின்றி தூங்காது கண்ணே 
நீயில்லையேல் இனி நானில்லையே 
உயிர் நீயே 

வான பறவை வாழ நினைத்தால் வாசல் திறக்கும் வேடந்தாங்கல் 
கான பறவை பாட நினைத்தால் கையில் விழுந்த பருவப்பாடல் 
மஞ்சள் மணக்கும் என் நெற்றி வைத்த பொட்டுக்கொரு அர்த்தம் இருக்கும் உன்னாலே 
மெல்ல சிரிக்கும் உன் முத்து நகை ரத்தினத்தை அள்ளி தெளிக்கும் முன்னாலே 
மெய்யானது உயிர் மெய்யாகவே தடை ஏது 

இடது விழியில் தூசி விழுந்தால் வலது விழியும் கலங்கி விடுமே 
இருட்டில் கூட இருக்கும் நிழல் நான் இறுதி வரைக்கும் தொடர்ந்து வருவேன் 
பங்கம் எதற்கு என் பொன்னுலகம் பெண்ணுருவில் பக்கம் இருக்கு கண்ணே வா 
இந்த மனம் தான் என் மன்னவனும் வந்துலவும் நந்தவனம் தான் அன்பே வா 
சுமையானது ஒரு சுகமானது சுவை நீதான் 



Saturday, September 1, 2012

பூவே பூச்சூடவா - Poove poochoodava

பூவே பூச்சூடவா எந்தன் நெஞ்சில் பால் வார்க்கவா 
வாசல் பார்த்து கண்கள் பூத்து காத்து நின்றேன் வா 

அழைப்பு மணி எந்த வீட்டில் கேட்டாலும் ஓடி நான் வந்து பார்ப்பேன் 
தென்றல் என் வாசல் தீண்டவே இல்லை கண்ணில் வெந்நீரை வார்ப்பேன் 
கண்களும் ஓய்ந்தது ஜீவனும் தேய்ந்தது 
ஜீவ தீபங்கள் ஓயும் நேரம் நீயும் நெய்யாக வந்தாய் 
எந்த கண்ணீரில் சோகம் இல்லை இன்று ஆனந்தம் தந்தாய் 
பேத்தி என்றாலும் நீயும் என் தாய் 

காலம் கரைந்தாலும் கோலம் சிதைந்தாலும் பாசம் வெளுக்காது மானே 
நீரில் குளித்தாலும் நெருப்பில் எரித்தாலும் தங்கம் கருக்காது தாயே 
உன் முகம் பார்க்கிறேன் அதில் என் முகம் பார்க்கிறேன் 
இந்த பொன் மானை பார்த்துக் கொண்டே சென்று நான் சேர வேண்டும் 
மீண்டும் ஜென்மங்கள் மாறும்போதும் நான் உன் மகளாக வேண்டும் 
பாச ராகங்கள் பாட வேண்டும் 

ஒரு பூங்காவனம் - Oru poongaavanam

ஒரு பூங்காவனம் புது மனம் 
அதில் ரோமாஞ்சனம் தினம் தினம் 
உலாவரும் கனாக்கள் கண்ணிலே 
ஓராயிரம் வினாக்கள் நெஞ்சிலே 

நான் காலை நேரத் தாமரை 
என் கானம் யாவும் தேன் மழை 
நான் கால் நடக்கும் தேவதை 
என் கோயில் இந்த மாளிகை 
எந்நாளும் தென்றல் வந்து வீசிடும் 
என்னோடு தோழி போல பேசிடும் 

உலாவரும் கனாக்கள் கண்ணிலே 
ஓராயிரம் வினாக்கள் நெஞ்சிலே 

நான் வானவில்லை வேண்டினால்
ஓர் விலை கொடுத்து வாங்குவேன் 
வெண் மேகக்கூட்டம் யாவையும் 
என் மெத்தையாக்கித் தூங்குவேன் 
சந்தோஷப்பூக்கள் எந்தன் சோலையில் 
சங்கீதம் பாடும் அந்தி மாலையில்  

உலாவரும் கனாக்கள் கண்ணிலே 
ஓராயிரம் வினாக்கள் நெஞ்சிலே 

அத்திக்காய் காய் - Athikaai kaai

அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே 
இத்திக்காய் காயாதே என்னை போல் பெண்ணல்லவோ 
நீ என்னைப் போல் பெண்ணல்லவோ 

அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே 
இத்திக்காய் காயாதே என்னுயிரும் நீயல்லவோ 
என்னுயிரும் நீயல்லவோ 

கன்னிக்காய் ஆசைக்காய் காதல் கொண்ட பாவக்காய் 
அங்கே காய் அவரைக்காய் மங்கை எந்தன் கோவைக்காய் 
மாதுளங்காய் ஆனாலும் என்னுளங்காய் ஆகுமோ 
என்னை நீ காயாதே என்னுயிரும் நீயல்லவோ 
இத்திக்காய் காயாதே என்னை போல் பெண்ணல்லவோ 

இரவுக்காய் உறவுக்காய் ஏங்கும் இந்த ஏழைக்காய் 
நீயும் காய் நிதமும் காய் நேரில் நிற்கும் இவளைக் காய் 
உருவங்காய் ஆனாலும் பருவங்காய் ஆகுமோ
என்னை நீ காயாதே என்னுயிரும் நீயல்லவோ 

ஏலக்காய் வாசனை போல் எங்கள் உள்ளும் வாழக்காய் 
ஜாதிக்காய் கேட்டது போல் தனிமை இன்பம் கனியக்காய் 
சொன்னதெல்லாம் விளங்காயோ தூது வழங்காய் வெண்ணிலா  
என்னை நீ காயாதே என்னுயிரும் நீயல்லவோ 

உள்ளமெல்லாம் மிளகாயோ ஒவ்வொரு பேர் சுரைக்காயோ 
வெள்ளரிக்காய் பிளந்தது போல் வெண்ணிலவே சிரித்தாயோ 
கொதைஎணன் காயாதே கொற்றவரைக்காய் வெண்ணிலா 
இருவரையும் காயாதே தனிமையில் ஏங்கே வெண்ணிலா

ஒரு காதல் தேவதை - Oru kaadhal devathai

ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள் 
ஒரு காதல் காவியம் கையோடு தந்தாள்
கள்ளூறும் காலை வேளையில்

பூக்களின் கருவறையில் பிறந்தவள் நீயா 
பூவுக்கொரு பூஜை செய்ய பிறந்தவன் நான் இல்லலையா 
இதயத்தின் தாமரையில் இருப்பவன் நீயா 
தாமரைக்குள் வீடு கட்டி தந்தவள் நானில்லையா 
ஓடோடி வந்ததால் உள் மூச்சும் வாங்குது
உன் மூச்சில் அல்லவா என் மூச்சும் உள்ளது 
ஒன்றானது 

யாருக்கு யாருறவு யாரறிவாரோ 
என் பெயரில் உன் பெயரை இயற்கையும் எழுதியதோ 
பொன் மகள் மூச்சு விட்டால் பூ மலராதோ 
பூ மகளின் வாய்மொழியே பூஜைக்கு வேதங்களோ 
கல்லூரி வாழ்க்கையில் காதல் ஏன் வந்தது 
ஆகாயம் எங்கிலும் நீலம் யார் தந்தது 
இயல்பானது 

நீதானே நாள்தோறும் - Neethaane naalthorum

நீதானே நாள்தோறும் நான் பாடக் காரணம் 
நீ எந்தன் நெஞ்சோடு நின்றாடும் தோரணம் 
நீயின்றி நான் பாட வேறேது கீர்த்தனம் 

உறவு ராகம் இதுவோ 
இன்று உதயமாகி வருதோ 
உனது தாகம் விளைய 
இது அடிமையான மனதோ 

ஊற்று போலவே பாட்டு வந்ததே உன்னைக் கண்டதாலே 
பாவை என்னையே பாட வைத்ததே அன்பு  கொண்டதாலே  
உன்னைப் பார்க்கையில் என்னை பார்க்கிறேன் உந்தன் காந்தக் கண்ணில் 
நன்றி சொல்லியே என்னை சேர்க்கிறேன் இன்று உந்தன் கையில் 
எந்தன் ஆவல் தீருமோ உந்தன் பாத பூஜையில் 
இந்த ஜீவன் தூபமோ உந்தன் நாத வேள்வியில் 
எண்ணம் நீ வண்ணம் நீ 
இங்கு நீ எங்கும் நீ 
வேதம் போலே உந்தன் பேரை ஓதும் உள்ளம் தான் 

நாத வெள்ளமும் கீத வெள்ளமும் வாரித்தந்தது நீ 
நாளும் என்னையே வாழவைக்கவே வாசல் வந்தது நீ 
வீணை தன்னையே கையில் ஏந்திடும் ஞானவல்லியே நீ   
வெள்ளைத்தாமரை பூவில் மேவியே ஆளும் செல்வியே நீ 
எந்தன் வாக்கு மேடையில் நின்று ஆடும் வாணியே 
எந்த நாளும் மேன்மையில் என்னை ஏற்றும் மேனியே 
அன்னை நீ அல்லவா 
இன்னும் நான் சொல்லவா 
நீ தான் தெய்வம் நீ தான் செல்வம் கீதம் சங்கீதம்  

உன்னோடு வாழாத - Unnodu vaazhaatha

உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு என் உள் நெஞ்சு சொல்கின்றது 
பூவோடு பேசாத காற்றென்ன காற்று ஒரு பூஞ்சோலை கேட்கின்றது 
மண்ணில் ஏன் ஏன் ஏன் நீயும் வந்தாய் எந்தன் பெண்மை பூப்பூக்கவே
நான் பிறக்கும் முன்னே அட நீ பிறந்ததேன்
நான் பிறக்கும் போது நீ உந்தன் கையில் என்னை ஏந்தத்தானா

மெல்லிய ஆண்மகனை பெண்ணுக்கு பிடிக்காது முரடா உன்னை ரசித்தேன்
தொட்டதும் விழுந்துவிடும் ஆடவன் பிடிக்காது கர்வம் அதை மதித்தேன்
முடிகுத்தும் உந்தன் மார்பு என் பஞ்சு மெத்தையோ
என் உயிர் பிதுக்கும் முத்தம் அது என்ன வித்தையோ
உன்னை போலே ஆணில்லையே 
நீயும் போனால் நானில்லையே
நீரடிப்பதாலே மீன் அழுவதில்லையே 
ஆம் நமக்குள் ஊடல் இல்லை

நீயொரு தீயென்றால் நான் குளிர் காய்வேன் அன்பே தீயாய் இரு 

நீயொரு முள்ளென்றால் நான் அதில் ரோஜா அன்பே முள்ளாய் இரு 
நீ வீரமான கள்ளன் உள்ளூரும் சொல்லுது 
நீ ஈரமான பாறை என் உள்ளம் சொல்லுது
உன்னை மொத்தம் நேசிக்கிறேன்  
உந்தன் மூச்சை சுவாசிக்கிறேன்
நீ வசிக்கும் குடிசை என் மாட மாளிகை 
காதலோடு வேதமில்லை