Saturday, September 10, 2011

எனது விழி வழிமேலே - Enadhu vizhi vazhimele

எனது விழி வழிமேலே
கனவு பல விழிமேலே
வருவாயா நீ வருவாயா
வருவாயா வருவாயா என நானே எதிர்பார்த்தேன்
இதை சொல்லத்துடிக்குது மனசு
சுகம் அள்ளத் தவிக்கிற வயசு


பள்ளிக்கூட பாடம் ஏதும் எனக்கில்லை ஞாபகம்
உன் கண்ணில் நூறு பாடம் கேட்டு மறக்காத ஞாபகம்
தடுமாற்றம் எதற்கு படித்தாலே உனக்கு
காதல் சிறகை காற்றில் விரித்து
நினைத்தாலே இனிக்கும் கனவின்று பலிக்கும்
உறங்காமல் உனைத்தானே நினைத்தே தனியாய் தவித்தேனே


பிள்ளைபோல தோளில் போட்டு தாலாட்டு பாடுவேன்
முல்லை பூவில் மேடை போட்டு உன்னோடு ஆடுவேன்
இமைக்காமல் ரசித்தேன் ருசிபார்த்து பசித்தேன்
ஏது உறக்கம் வேண்டாம் கிறக்கம்
வட்டி போட்டு மொத்தமா கட்ட வேணும் மொத்தமா
உனைத்தானே உனைத்தானே தனியாய் தவித்தே துடிக்காதே