Friday, August 26, 2011

அல்லா உன் ஆணைப்படி - Allah un aanaippadi

அல்லா உன் ஆணைப்படி எல்லாம் நடக்கும் ஓ எல்லாம் நடக்கும்
தொல்லை இல்லாத வண்ணம் நன்மை பிறக்கும் ஓர் நன்மை பிறக்கும்
உயிர் காதல் இன்று உண்டானது இரு ஜீவன் ஒன்று என்றானது 
எந்த பிறப்பும் நீயும் நானும் கூட 

காதலுக்கு உண்டு கல்யாண ராசி சேர்த்து வைக்கும் நம்மை அல்லாவின் ஆசி 
வாடுவதோ எந்தன் மும்தாஜின் தேகம் ஓடி வந்தேன் இனி நீதான் என் தேகம் 
நீ நீங்கி இருந்தால் சோலைவனம் பாலை ஆகும் எனக்கு 
நீ கூட நடந்தால் வேறு ஒரு சொர்க்கம் இங்கே எதற்கு 
உன்னை நான் என்னை நீ காணும் போது கண்கள் கல்யாண பண் பாடுமே 

பூப்பறித்தேன் இந்த பூம்பாவைக்காக நான் தொடுத்தேன் இந்த பூமாலைக்காக 
மாலையுடன் திருமாங்கல்யம் சூடி கையணைபேன் நல்ல கன்னூஞ்சல் ஆடி 
கேள் காது குளிர காதல் எனும் கீதை நாளும் படிப்பேன் 
நான் காலம் முழுதும் கண்ணன் தொடும் ராதை போல இருப்பேன் 
அம்மம்மா கண்ணம்மா ஆசை என்னும் மழை ஓயாது ஓயாதம்மா 

Thursday, August 18, 2011

அந்தியிலே வானம் - Andhiyile vaanam

அந்தியிலே வானம் தந்தனத்தோம் போடும் அலையோட சிந்து படிக்கும்
சந்திரரே  வாரும்  சுந்தரிய  பாரும்  சதிராட்டம்  சொல்லி கொடுக்கும்
ஓடும்  காவிரி  இவதான்  என்  காதலி  
குளிர்  காய தேடி  தேடி கொஞ்ச  துடிக்கும்

கட்டமர தோணி போல 
கட்டழகன் உங்க மேல சாஞ்சா சந்தோசம் உண்டல்லோ
பட்டுடுத்த தேவையில்ல 
முத்துமணி ஆசையில்ல பாசம் நெஞ்சோடு உண்டல்லோ
பாலூட்டும் சங்கு அது தேனூட்டும் இங்கு 
பாலாறும் தேனாறும் தாலாட்டும் பொழுது 
பாய்மேல நீ போடு தூங்காத விருந்து 
நாளும்  உண்டல்லோ அத நானும் கண்டல்லோ 
இது நானும் நீயும் பாடும் பாட்டல்லோ

வெள்ளியல தாளந்தட்ட 
சொல்லியொரு மேளங்கோட்ட வேளை வந்தாச்சு கண்ணம்மா 
மல்லியப்பூ மாலை கட்ட 
மாரியிட வேளை கிட்ட மஞ்சம் போட்டாச்சு பொன்னம்மா
கடலோரம் காத்து ஒரு கவி பாடும் பாத்து 
காணாம நூலானேன் ஆளான நான்தான் 
தோளோடு நான் சேர ஊறாதோ தேன்தான்  
தேகம் ரெண்டல்லோ இரு ஜீவன் ஒன்றல்லோ 
இரு தேகம் ஒன்று  ஜீவன் என்று கூடும்  இன்றல்லோ

ஒரு கிளி உருகுது - Oru kili uruguthu

ஒரு கிளி உருகுது உரிமையில் பழகுது ஒ மைனா மைனா
குறும்புகள் தொடருது அரும்புகள் வளருது ஒ மைனா மைனா
தளிரிது மலரிது தானா இது ஒரு தொடர்கதை தானா (2)
இரு மனம் இணையுது இரு கிளி தழுவுது ஒ மைனா ஒ மைனா (2)

நிலவெரியும் இரவுகளில் ஒ மைனா ஒ மைனா
மணல் வெளியில் சடுகுடுதான் ஒ மைனா ஒ மைனா
கிளிஞ்சல்களே உலையரிசி இவளல்லவா இளவரசி  (2)
தேனாடும் பூவெல்லாம் பாய் போடும்
ஒரு கிளி மடியினில் ஒரு கிளி உறங்குது ஒ மைனா ஒ மைனா

இலைகளிலும் கிளைகளிலும் ஒ மைனா ஒ மைனா
இரு குயில்கள் பெயர் எழுதும் ஒ மைனா ஒ மைனா
வயல்வெளியில் பல கனவை விதைக்கிறதே சிறு பறவை (2)
நீரோடை எங்கெங்கும் பூவாடை
மலர்களின் வெளிகளில் இரு பிறை வளருது ஒ மைனா ஒ மைனா
 

மாலையில் யாரோ - Maalaiyil yaaro

மாலையில் யாரோ மனதோடு பேச
மார்கழி வாடை மெதுவாக வீச
தேகம் பூத்ததே, ஓ, மோகம் வந்ததோ
மோகம் வந்ததும், ஓ, மௌனம் வந்ததோ
நெஞ்சமே பாட்டெழுது...அதில் நாயகன் பேரெழுது

வருவான் காதல் தேவன் என்று காற்றும் கூற
வரட்டும் வாசல் தேடி என்று காவல் மீற
வளையல் ஓசை ராகமாக இசைத்தேன் வாழ்த்துப்பாடலை
ஒரு நாள் வண்ண மாலை சூட வளர்த்தேன் ஆசைக்காதலை

நெஞ்சமே பாட்டெழுது...அதில் நாயகன் பேரெழுது

கறை மேல் நானும் காற்று வாங்கி விண்ணைப் பார்க்க
கடல் மீன் கூட்டம் ஓடி வந்து கண்ணைப் பார்க்க
அடடா நானும் மீனைப் போல கடலில் வாழக்கூடுமோ
அலைகள் வெள்ளி ஆடை போல உடலின் மீது ஆடுமோ
நெஞ்சமே பாட்டெழுது...அதில் நாயகன் பேரெழுது 

காதல் ஓவியம் - Kaadhal Oviyam

காதல் ஓவியம் பாடும் காவியம்
தேன்சிந்தும் பூஞ்சோலை நம் ராஜ்ஜியம்
என்றும் ஆனந்தம் பேரின்பம் தெய்வீகம்

தேடினேன் ஓஓ என் ஜீவனே
தென்றலிலே மிதந்து வரும் தேன் மலரே
நீ என் நாயகன் காதல் பாடகன்
அன்பில் ஓடி இன்பம் கோடி என்றும் காணலாம்
காதல் ஓவியம் பாடும் காவியம்
தேன்சிந்தும் பூஞ்சோலை நம் ராஜ்ஜியம்
என்றும் ஆனந்தம் பேரின்பம் தெய்வீகம்
ஓவியம் பாடும் காவியம்

தாங்குமோ ஓஓ என் தேகமே
மன்மதனின் மலர் கணைகள் தோள்களிளே
மோகம் தீரவே வா என் அருகிலே
உள்ளம் கோவில் கண்கள் தீபம் பூஜை காணலாம்
காதல் ஓவியம் பாடும் காவியம்
தேன்சிந்தும் பூஞ்சோலை நம் ராஜ்ஜியம்
என்றும் ஆனந்தம் பேரின்பம் தெய்வீகம்
 

சிறு பொன்மணி - Siruponmani asaiyum

siru ponmani asaiyum adhil therikkum puthu isaiyum
iru kanmani pon imaigalil thaala layam
nithamum thodarum kanavum ninaivum idhu marathu
raagam thaalam baavam pola naanum neeyum sera vaendum

vizhiyil sugam pozhiyum idhazh mozhiyil suvai vazhiyum
ezhuthum varai ezhuthum ini pularum pozhuthum
theliyaathathu ennam kalaiyaathathu vannam
azhiyaathathu adangaathathu anai meeridum ullam
vazhi theduthu vizhi vaaduthu kili paaduthu un ninaivinil

nathiyum muzhu mathiyum iru idhayam thanil pathiyum
rathiyum adhin pathiyum perum sugame uthayam
vithai oondriya nenjam vilaivaanathu manjam
karai theduthu kavi paaduthu kalanthaal sugam minjum
uyir un vasam udal en vasam sadhiraduthu un ninaivugal

சிறு பொன்மணி அசையும் அதில் தெறிக்கும் புது இசையும்
இரு கண்மணி பொன்னிமைகளில் தாளலயம்
நிதமும் தொடரும் கனவும் நினைவும் இது மாறாது
ராகம் தாளம் பாவம் போல நானும் நீயும் சேர வேண்டும்

விழியில் சுகம் பொழியும் இதழ் மொழியில் சுவை வழியும்
எழுதும் வரை எழுதும் இனி புலரும் பொழுதும் -- (2)
தெளியாதது எண்ணம் கலையாதது வண்ணம்(2)
அழியாதது அடங்காதது அணை மீறிடும் உள்ளம்
வழி தேடுது விழி வாடுது கிளி பாடுது உன் நினைவினில்

நதியும் முழு மதியும் இரு இதயம் தனில் பதியும்
ரதியும் அதின் பதியும் பெரும் சுகமே உதயம் -- (2)
விதை ஊன்றிய நெஞ்சம் விளைவானது மஞ்சம் (2)
கரை தேடுது கவி பாடுது கலந்தால் சுகம் மிஞ்சும்
உயிர் உன் வசம் உடல் என் வசம் சதிராடுது உன் நினைவுகள்